அமெரிக்காவில் தமிழ் கொண்டாட்டம்

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவின் தலைநகரான சாக்ரமென்டோவில் வாழும் தமிழர்களின் தமிழ் மன்றம் சார்பில் சமீபத்தில் அங்கு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவில் தமிழ் கொண்டாட்டம்

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவின் தலைநகரான சாக்ரமென்டோவில் வாழும் தமிழர்களின் தமிழ் மன்றம் சார்பில் சமீபத்தில் அங்கு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது குறித்து அம்மன்றத்தின் உறுப்பினரான சந்தியா நவீன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 'நான் கடந்த 2009 -இல் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்று செட்டில் ஆனேன். நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களைப் போன்று தமிழர்கள் ஏராளாமானோர் வசித்து வருகின்றனர். இதனால் கடந்த 1999- ஆம் ஆண்டு இங்கு தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், மக்களின் ஆதரவுடன் இம்மன்றம் படிப்படியாக வளர்ந்து இன்று அந்நகரத்தில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போது இதன் தலைமைப் பொறுப்பை சிவராமகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரன் கவனித்துக் கொள்கின்றனர்.
 தற்போது இந்நகரத்தில் சுமார் 100 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதனால், நமது சிறந்த தமிழ் கலாசாரத்தை இங்கு வாழும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதும், பாதுகாப்பதுமே இந்த மன்றத்தின் நோக்கம்.

அதனடிப்படையில் திருக்குறள் போட்டி, பொங்கல் விழா, குளிர்கால கொண்டாட்டம், இசை நிகழ்ச்சி, தமிழ் புத்தாண்டுவிழா என பல நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.
 அந்த வகையில், இந்த ஆண்டு மே 4 - 2019 அன்று தமிழ் புத்தாண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் பழம்பெரும் தமிழ் புலவர்களை நினைவுபடுத்தும் வகையில் சிறுவர் சிறுமியர் பாரதியார், திருவள்ளுவர், அவ்வையார் என்று வேடமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
 மேலும், பரதநாட்டியம், கோலாட்டம் , சிறுவர்கள் பட்டிமன்றம், பாரதியார் பாடல்கள், வில்லுப்பாட்டு, மயிலாட்டம் , ஒயிலாட்டம் , கும்மி, சிலம்பாட்டம், காவடியாட்டம் என சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும், ஆசிரியர்களும் பங்கு பெற்றனர். நம் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் வினா விடை போட்டியும் நடைபெற்றது. நெல்லை கண்ணனின் "கேள்வி நேரம்' நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது .
 தமிழ்புத்தாண்டு விழாவில் பங்கு பெற்றவர்கள், இங்கு இயங்கிவரும் அனைத்து தமிழ் பள்ளிகளின் மாணவர், மாணவியர், ஆசிரியர் ஆவர்.
 தமிழ் குடும்பங்கள் மட்டுமின்றி பிற மொழி பேசுபவர்களும் மிகவும் ஆர்வமுடன் எங்களுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறக்க செய்தனர்'' என்றார்.
 - ஸ்ரீதேவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com