சமையல்! சமையல்!

வாணலியில் நெய் விட்டு, அதில் ஊற வைத்து தோலுரித்த பாதாம் மற்றும் மக்ஹானாவை பொன்னிறமாக வறுக்கவும்.

பாதாம் ஸ்பெஷல் சமையல்..

பாதாம் மக்ஹானா கீர் 

தேவையானவை: 

கிரீம் பால் - 2 கிண்ணம்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 துளி
ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு - அரை கிண்ணம்
மக்ஹானா (காய்ந்த தாமரை விதை பொரித்தது) - 1 கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி


செய்முறை:   வாணலியில் நெய் விட்டு, அதில் ஊற வைத்து தோலுரித்த பாதாம் மற்றும் மக்ஹானாவை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர், அடிகனமான பாத்திரத்தில் பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்.  அத்துடன் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும்படி நன்கு கலந்துவிடவும். பால் நன்கு சுண்டி வந்ததும். அதில்  வறுத்து வைத்த பாதாம் மற்றும் மக்ஹானாவைச் சேர்த்து கிளறிவிடவும்.  மக்ஹானா நன்கு வெந்து குழைந்ததும் இறக்கவும். சுவையான பாதாம் மக்ஹானா கீர் ரெடி. இதை சூடாகவோ, குளிர வைத்தோ அருந்தலாம்.


பாதாம் தேங்காய் பர்ஃபி 

தேவையானவை:  
துருவிய இளம் தேங்காய் - 1 கிண்ணம்
பாதாம் - அரை கிண்ணம்
சர்க்கரை -1 கிண்ணம்
நெய் -  முக்கால் கிண்ணம்


செய்முறை: பாதாமை ஊற வைத்து தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். நான் ஸ்டிக் தாவாவில்  நெய் சேர்த்து மிதமான சூட்டில் சூடாக்கவும். அதில் துருவிய தேங்காய் மற்றும் பாதாம் விழுதைச் சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும். பாதாம் விழுது பாத்திரத்தில்  ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளற வேண்டும். சர்க்கரையில் உள்ள நீர் வற்றி கெட்டியான பதம் வரும் வரை நன்கு கிளறுவது அவசியம்.   பின்னர், ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில்  பாதாம் கலவையைக் கொட்டி ஆறவிடவும்.  சிறிது ஆறியதும், வேண்டிய வடிவத்தில் துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்ளவும். சுவையான பாதாம் தேங்காய் பர்ஃபி தயார்.


பாதாம் கஸ்டர்ட் ஆப்பிள் ராஸ்ப்ரி 

தேவையானவை: 

பாதாம் பருப்பு - 30 கிராம்
கஸ்டர்ட் ஆப்பிள் ( சீதாப்பழம் சதைப்பகுதி) -2 கிராம்
டபுள் கிரீம் - 1 கிராம்
கஸ்டர் சுகர் ( சர்க்கரை பவுடர்) - 30 கிராம்


செய்முறை:  ஊற வைத்து தோலுரித்த பாதாம் பருப்பை அவனில் 1 டிகிரி செல்சியஸில் சுட்டெடுக்கவும். பின்னர் பாதி பாதாமை எடுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாதாமை நறுக்கிக் கொள்ளவும். சீதாப்பழம் சதைப்பகுதி, டபுள் கிரீம், சர்க்கரை அதனுடன் கொரகொரப்பாக பொடித்து வைத்துள்ள பாதாமை சேர்த்து நன்கு கலந்து பிரிஜ்ஜில் வைத்து குளிரவிட்டு, எடுத்து பின்னர் நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து பரிமாறவும்.


பாதாம் எள் பின்னி 

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கிண்ணம்
ரவை - 2 தேக்கரண்டி
பாதாம் பருப்பு - கால் கிண்ணம்
வறுத்த வெள்ளை எள் பொடி - கால் கிண்ணம்
நெய் - முக்கால் கிண்ணம்
கடலை மாவு - 1 1/2  தேக்கரண்டி
சர்க்கரை - 1 கிண்ணம்
தண்ணீர் - அரை கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி
வறுத்த வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
வறுத்த பாதாம் - 3 தேக்கரண்டி


செய்முறை:  பேனில்  நெய்யை விட்டு சூடாக்கவும். அதில் ரவை, கோதுமை மாவு சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். அடுத்து ஊறவைத்து தோலுரித்த பாதாமை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை பாகுபதம் வந்ததும். அத்துடன் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவு கலவையை சேர்த்து கிளறவும். அதனுடன் ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்க வேண்டும். தண்ணீர் வற்றியவுடன், பொடித்து  வைத்துள்ள பாதாம், எள் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கி ஆறவிடவும். மாவு கலவை ஆறியதும்  சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாக உருட்டி அதன் நடுவில் ஒரு  பாதாமை வைத்து பொதித்து, வறுத்து வைத்துள்ள வெள்ளை எள்ளில் உருட்டி எடுத்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com