சமையல் டிப்ஸ்

அச்சு முறுக்கு செய்யும்போது , அச்சு அதிகம் சூடானால் அச்சில் மாவு ஒட்டாது. மாவை மொத்தமாக ஒரே பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, அச்சை முக்காமல் சிறிய அளவில் வேறு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு முறுக்கு
சமையல் டிப்ஸ்

அச்சு முறுக்கு செய்யும்போது , அச்சு அதிகம் சூடானால் அச்சில் மாவு ஒட்டாது. மாவை மொத்தமாக ஒரே பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, அச்சை முக்காமல் சிறிய அளவில் வேறு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு முறுக்கு இடலாம்.

வீட்டில் பன்னீர் தயாரிக்கும்போது கடையில் வாங்கிய பன்னீர் போல சரியாக துண்டு போட வராது. பன்னீரை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் மிருதுவாகி விடும். அதை ஒரு பாலீத்தின் கவரில் போட்டு இறுக்கமாக சுற்றி ஃப்ரீஸரில் சில மணி நேரங்கள் வைத்துவிட்டு பிறகு வெளியே எடுத்து துண்டுகள் போட்டால் நன்றாக வரும்.

பச்சை நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது, அதனுடன் நிறைய இஞ்சித் துண்டுகளையும் பச்சை மிளகாயும் போட்டு வைக்கலாம். நார்த்தங்காய் ஊறுவதற்கு தொட்டுக்கொள்ள இஞ்சி, மிளகாய் உதவுவதோடு மூன்றும் கலக்கும்போது வித்தியாசமான ருசியில் இருக்கும்.

தக்காளியின் தோலை சுலபமாக உரிக்க, கத்தியால் பழத்தின் மேற்புறத்தில் பிளஸ் குறி போல கீறி விடவும். பிறகு சில நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைத்து எடுத்தால், பழத்தின் தோலை நான்கு பகுதிகளாக சுத்தமாக எடுத்துவிடலாம். (மைக்ரோவேவ் ஓவன் இருந்தால், பழங்களை வெட்டி ஓவனில் அரை நிமிடம் வைத்து எடுத்தாலும் தோல் எளிதாக கழன்று வந்து விடும்).

எலுமிச்சை சாதம் செய்யும் போது சிறிதளவு இஞ்சியைத் துருவி,பச்சை மிளகாயுடன் வாணலியில் வதக்கி போட்டால் சுவையும் மணமும் கூடும். பிஸிபேளாபாத் செய்யும்போது அரிசி ஒரு அளவு என்றால், அதில் பாதி அளவு துவரம் பருப்பு சேர்த்து குழைய வேகவைக்க வேண்டும். குழைந்தால்தான் ருசியாக இருக்கும்.

கறிவேப்பிலை சாதம் செய்யும் போது சிறிதளவு கொத்துமல்லித் தழையை யும் சேர்த்து அரைத்தால் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய்ப் பொடிமாஸ் செய்து இறக்கும்போது கடைசியாக இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சுவை கூடும். வெந்தயக் குழம்பு கொதித்து இறக்கி வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி எள்ளுப் பொடியைப் போட்டால் குழம்பு மிகவும் வாசனையுடன் இருக்கும். அல்லது ஒரு தேக்கரண்டி  நல்லெண்ணெய் விட்டால் குழம்பு மணமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது, பெரிய வெங்காயத்தை மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் நன்கு சிவக்க வறுத்து தூவினால் சுவை கூடும்.

கிரைண்டரில் அரிசி சிக்காமல் இருக்க வேண்டுமானால், உளுத்தம் பருப்பு ஒரு பிடியை அரிசியுடன் சேர்த்து அரைத்தால் அரிசி அரைக்க சுலபமாக இருக்கும். மாவும் வெண்ணெய் பால் சீக்கிரம் முடிந்து விடும்.

எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாய் சேர்த்தால் தான் ருசியாக இருக்கும். வற்றல் மிளகாய் ஏற்றதல்ல.

அலுமினியப் பாத்திரங்களில் உள்பக்கம் கரையாக உள்ளது? அந்தப் பாத்திரங்களில் தக்காளிப் பழங்கள் அல்லது வெங்காயம் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். அரை மணி நேரம் கழித்து தேய்த்துக் கழுவவும்.  கரை போய்விடும்.

வாழை இலை மஞ்சள் கொத்து போன்றவற்றை பேப்பரில் சுற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வரை ஃபிரஷ்ஷாக இருக்கும்.

சமையல் மேடை மற்றும் ஸ்டவ்வின் பின்புறம் உள்ள சுவர்கள் அழுக்கு ஏறி இருந்தால் அந்த இடத்தில் ஷாம்பூ போட்டு கழுவி தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

தேங்காய் சாதம் செய்வதற்கு சற்று முற்றிய தேங்காய் ஏற்றது. எண்ணெய் சிறிதளவு சேர்த்து தேங்காய்த் துருவலை வறுத்தால் போதும்.

வாழை இலையில் முதலில் உப்பு இரண்டாவது இனிப்பு மூன்றாவது அன்னம் அதைச் சுற்றி பச்சடி கூட்டு பொரியல் வகைகள் அவியல் ஊறுகாய் ஆகியவற்றை வலதிலிருந்து இடது பக்கமாக பரிமாற வேண்டும் அப்பளம் வடை ஐந்தாவது புளிசாதம் எலுமிச்சை சாதம் என்று பரிமாற வேண்டும்.

புளியோதரை தயார் செய்யும்போது தேவையானவை வறுத்து கரகரப்பாகப் பொடி செய்து கலந்து விடுங்கள். 

எப்போதாவது பயன்படுத்தும் ஹாட் பேக், பிளாஸ்ஷக் மற்றும் வாடை அடிக்கும் டப்பாக்கள் போன்றவற்றின் உள்ளே பேப்பரை சுருட்டி வைத்து விட்டால் சில நாட்கள் கழித்து வந்தாலும் வாடை அடிக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com