டிப்ஸ்.. டிப்ஸ்..

மோர்க் குழம்பு செய்ய எந்தக் காய்கறியும் இல்லாத போது கொஞ்சம் புதினாக் கீரையை நெய் விட்டு வதக்கிப் போட்டு இறக்கினால் புதினா மணத்துடன் மோர்க் குழம்பு சுவையாக இருக்கும்.
டிப்ஸ்.. டிப்ஸ்..

* மோர்க் குழம்பு செய்ய எந்தக் காய்கறியும் இல்லாத போது கொஞ்சம் புதினாக் கீரையை நெய் விட்டு வதக்கிப் போட்டு இறக்கினால் புதினா மணத்துடன் மோர்க் குழம்பு சுவையாக இருக்கும்.
* தேங்காய் பர்பி செய்யும் போது பத்து முந்திரிப் பருப்பை ஊற வைத்து தேங்காய்த் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பர்பி செய்தால் முந்திரி வாசனையுடன் தேங்காய் பர்பி சுவையாக இருக்கும்.
* பழ பாயசம், கீர் வகைகளை விரைவாகக் குளிர்விக்க அடி அகலமான பாத்திரத்தில் 
ஊற்றி, ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்தால் பத்து நிமிடங்களில் ஜில்லென்று ஆகிவிடும்.
* புளிக்காய்ச்சல் செய்யும் போது புளி கொதிக்கும் போதே வேர்க்கடலைக்குப் பதிலாக வேக வைத்த கொண்டைக் கடலையை அதனுடன் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* பொங்கல் செய்ய அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவலையும் சேர்த்து ஊற வைத்தால் பொங்கல் மிகவும் சுவையாகவும் அருமையாகவும் இருக்கும்.
* ஒரு கப் வெந்த கடலைப்பருப்பும், கால் கப் பொடி செய்த வெல்லமும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து தோசை மாவில் கலந்து தோசை சுட மிகவும் சுவையாக இருக்கும். 
- கே.ஆர். உதய குமார், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com