நகை வாங்க நல்ல ஐடியா!

"நாளுக்கு நாள் உயர்ந்து எட்டாக் கனியாகிவரும் தங்கத்தின் மீது எப்போதுமே தமிழர்களுக்கு ஒரு மதிப்பு உண்டு
நகை வாங்க நல்ல ஐடியா!

"நாளுக்கு நாள் உயர்ந்து எட்டாக் கனியாகிவரும் தங்கத்தின் மீது எப்போதுமே தமிழர்களுக்கு ஒரு மதிப்பு உண்டு. இதனாலேயே விழாக்காலங்களிலும், விசேஷ நாட்களிலும் தங்க நகைகள் அணிந்து கொள்வது தொன்று தொட்டு வரும் பழக்கமாகிப் போனது. எனவே, பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்த பெருந்தொகையை செலுத்தி தங்க நகைகளை நாம் வாங்கும் போது சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதன் மூலம், நாம் செலவிடும் தொகையில் சுமார் 40 சதவீதத்தைச் சேமிக்க முடியும்'' என்கிறார் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள "Brilliant Cut'' ஜுவல்லரியின் உரிமையாளர் ராகுல் சௌவாத்தியா. கடந்த 25 ஆண்டுகளாக வைரம் மற்றும் தங்க நகைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வரும் இவர், தங்க நகைகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை எவை என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: 

"ஒரு தங்க நகையை வாங்கும்போது, முதலில் கவனிக்க வேண்டியது தங்கத்தின் தரம்தான். அதில்தான் அத்தனையும் அடங்கியுள்ளது. பொதுவாக தங்கத்தை நகைகளாக மாற்றும்போது அதனுடன் பிற உலோகங்கள் சேர்த்தால்தான் அதை ஆபரணங்களாக மாற்ற முடியும். அந்த வகையில் 22 கேரட் நகைகளில் தங்கத்தின் அளவு 91.6 சதவீதமாகும். இதைதான் 916 ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட தங்கம் என்கிறார்கள் பி.ஐ.எஸ் எனப்படும் (பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ்). அதனால் தங்க நகை வாங்கும்போது, முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கோல்ட் டெஸ்டிங். இதன்மூலம் நீங்ககள் வாங்கும் நகையில் எந்தளவு 916 தங்கம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். 
அடுத்தபடியாக நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியது. செய்கூலி, சேதாரம் போன்றவை. செய்கூலி என்பது நகை செய்வதற்கான கூலி, இது கடைக்குக் கடை மாறுபடுகிறது. சேதாரம் என்பது நகை செய்யும்போது ஏற்படும் உலோகத்தின் இழப்பு. இந்த இழப்பை ஈடுகட்ட, நகை வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடமே நேரடியாக சேதாரத் தொகையை வாங்குகின்றனர். இது அந்த நகையைப் பொறுத்து 5% முதல் கிட்டத்தட்ட 30% வரைக்கூட வசூலிக்கப்படுகிறது. செய்கூலி, சேதாரம் மற்றும் வரிப்பணம் போன்றவற்றில்தான் உபரியாக பணத்தை இழக்கிறோம். அதனால், 916 ஹால்மார்க் நகைகள், எந்தக் கடைகளில் குறைந்த செய்கூலி சேதாரத்தில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொண்டு, பின்பு நகையை வாங்குங்கள். 
அடுத்து நெக்லஸ், டாலர் வைத்த செயின் போன்ற நகைகளை தேர்வு செய்யும்போது பின் பக்கம் ஓபன் டைப்பில் உள்ளதாக பார்த்து வாங்குங்கள். மூடியிருக்கும் நகையை வாங்கும்போது, நீங்கள் தங்கத்தின் அளவில் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. 
அதேபோன்று கே.டி.எம். நகைகளை விற்க உலகெங்கிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், கே.டி.எம். நகைகளை ஒட்டப் பயன்படுத்தப்படும் ஒருவித கெமிக்கலினால், அந்த நகையை தொடர்ந்து அணிந்து கொள்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. எனவே, கே.டி.எம் நகைகளை வாங்காதீர்கள். 
அதுபோன்று பழைய நகையை விற்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், நீங்கள் எந்த கடையில் 916 தங்கம் வாங்கினாலும், அதை அவரிடம் திருப்பி கொடுக்கும்போது அன்று தங்கம் என்ன விலையோ, அந்த விலையை உங்களுக்கு திருப்பி கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அதே சமயம், ஒரு நகை வாங்கும்போது, செய்கூலி, சேதாரம் சேர்த்து வாங்குகிறார்கள். திருப்பி கொடுக்கும்போது சேதாரம் கழித்து எடுத்துக் கொள்கிறார்கள் இது ஏன்? யோசித்துப் பாருங்கள். காரணம் என்னவென்றால், பொதுவாக, நகைக் கடைகள் சில்லறை விற்பனை செய்வதால், நிர்வாக செலவு, வேலையாட்களின் கூலி போன்ற செலவுகளின் அடிப்படையில் செய்கூலி, சேதாரத்தை சேர்த்து விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
இதை பொதுமக்கள் புரிந்து கொண்டு, நீங்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாங்கிய 916 நகையை அதே கடையில் திருப்பிக் கொடுக்கும்போது அன்றைய விலையில் அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அந்த தங்கத்தில் குறையிருக்கிறது என்று அர்த்தம். 
அதனால்தான், நகையை வாங்கும்போது நான் முன்பு சொன்னது போன்று கட்டாயமாக கோல்ட் டெஸ்டிங் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது அதில் 916 தங்கம் எவ்வளவு இருக்கிறது என்பது அப்போதே தெரிந்துவிடும். அப்படி தெரிந்து வாங்கும் நகையை நீங்கள் எங்கே திருப்பி கொடுத்தாலும் அன்றைய விலைக்கே கொடுக்கும்படி தைரியமாக கேட்கலாம். 

எங்கள் நிறுவனத்தை பொருத்தவரையில் தங்கத்தினை மொத்த வியாபாரம் செய்வதாலும், புது டிரென்டில் "மெஷின் மேட்' நகைளை கணினி உதவியுடன் வடிவமைத்து இயந்திரங்களால் சொந்தமாக தயாரிப்பதாலும், வேலை செய்யும் நேரம் குறைகிறது மற்றும் அதிக அளவிலான சேதாரமும் தவிர்க்கப்படுகிறது. எனவே, எங்களிடம் நகைகளை நேரடியாக வாங்கும்போது, மற்ற கடைகளிலிருந்து பல ஆயிரம் ரூபாய் மிச்சப்படுகிறது. அதுபோன்று பழைய, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை அன்றைய விலைக்கே வாங்கிக் கொள்கிறோம்'' என்றும் சொல்லும் ராகுல் சௌவாத்தியா, தங்கம் மற்றும் வைர நகைகள் குறித்த எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார். எனவே, நகை பற்றிய எந்த சந்தேகங்களுக்கும் அவரை தொடர்பு கொள்ளலாம். 
- ஸ்ரீ

நகைகளைத் தேர்வு செய்யும்போது பின் பக்கம் ஓபன் டைப்பில் உள்ளதாக பார்த்து வாங்குங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com