கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படும் "மிமி' என்ற படத்தில் இளம் வாடகை தாயாக கீர்த்தி சனான் நடிக்கிறார். ""இந்தப் பாத்திரத்தில் நடிக்க முதலில் தயக்கமாக இருந்தாலும், இதுவரை நான் ஏற்றிராத பாத்திரம் என்பதாலும், ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த எனக்கு, கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படத்தில் முதன்முறையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்ததால் மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்'' என்று கூறும் கீர்த்தி சனானுடன் இப்படத்தின் நாயகனாக பங்கஜ் திரிபாதி நடிக்கிறார்.