நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட...

கொலஸ்டிராலில் நல்லது கெட்டது என இருவகைகள் உள்ளன. இதில் நல்ல கொலஸ்டிரால் உடலில் அதிகம் இருப்பது நல்லது. இதற்கு நாம் சிலவற்றை கடைபிடித்தால் பெற முடியும்.
நல்ல கொலஸ்டிராலை உடல் கூட்ட...

கொலஸ்டிராலில் நல்லது கெட்டது என இருவகைகள் உள்ளன. இதில் நல்ல கொலஸ்டிரால் உடலில் அதிகம் இருப்பது நல்லது. இதற்கு நாம் சிலவற்றை கடைபிடித்தால் பெற முடியும். உதாரணமாக, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, உடல் எடையை பராமரித்தல், குறிப்பிட்ட நிலையை கூட்டும் உணவுகளை சேர்த்தல் நல்ல கொலஸ்டிராலை பெறவும், பராமரிக்கவும் இயலும்.
 ஆரோக்கியமான உணவு:
 கடலை வகைகள், பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு, மீன் வகைகள் ஆகியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன்மூலம் நமது உடலில் நல்ல கொலஸ்டிராலின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.
 உடற்பயிற்சி:
 சாப்பாட்டுக்கு முன் குறைந்தது 30-40 நிமிடங்கள் நமது உடலை ஈடுபடுத்தி செய்யும் பயிற்சிகளின் மூலமும் நல்ல கொலஸ்டிராலை பராமரிக்க இயலும்.
 உடல் எடையை பராமரிப்போம்:
 நமது உடலின் எடையைத் தொடர்ந்து பராமரிப்பதின் மூலம் நல்ல கொலஸ்டிராலையும் காக்க இயலும். இனிப்புகள், பிஸ்கெட்ஸ், குளிரூட்டப்பட்ட பானங்கள், ஜாம்கள் மற்றும் கேக்குகள் சாப்பிடுவதை குறைத்தாலே எடையை பராமரிக்க இயலும். கொழுப்பு குறைந்த பால் உணவுகள், பழங்கள், காய்கறிகளை கூடுதலாக சேர்த்துக் கொள்வதன் மூலமும் சமாளிக்கலாம்.
 குறிப்பிட்ட உணவை கூடுதலாக சாப்பிடலாம்:
 ஓட்ஸ் சாப்பிடுவது கெட்ட கொலஸ்டிராலுக்கு நல்லது. சோயாவில் உருவாக்கப்பட்டவை நல்ல கொலஸ்டிராலை கூட்டும். தக்காளி, பூண்டு, ப்ராக்கோலி, ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை போன்ற வீரியமற்ற அமிலங்களைக் கொண்ட பழங்கள், புளிப்பு சுவைமிக்க சிவப்பு பழ வகை ஸ்டிரா பெர்ரி, கிரீன் டீ, திராட்சைகள் ஆகியவற்றை சாப்பிட்டும் நல்ல கொலஸ்டிராலை கூட்டிக் கொள்ளலாம்.
 - ராஜிராதா, பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com