இந்தியாவிற்காக நான் விளையாடிக் காட்டுவேன்!: பூனம் யாதவ்

நடந்து முடிந்த பெண்களுக்கான ப20 உலகக் கோப்பைக்கான போட்டியில் இறுதியில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், பத்து விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தைக்
இந்தியாவிற்காக நான் விளையாடிக் காட்டுவேன்!: பூனம் யாதவ்

நடந்து முடிந்த பெண்களுக்கான ப20 உலகக் கோப்பைக்கான போட்டியில் இறுதியில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், பத்து விக்கெட்டுகளை எடுத்து அனைவரின் கவனத்தைக் கவர்ந்திருப்பவர் பூனம் யாதவ். 

பேட் செய்பவரின் காலைப் பதம் பார்க்கும் விதத்தில் பந்து வீசும் "கூக்ளி' ரக வீச்சிற்கு பெயர் பெற்றவர் பூனம். ஐந்து அடி உயரம். 28 வயதாகும் பூனம், ப20 உலகத் தர வரிசையில் ஏழாவது இடத்திலும், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தர வரிசையில் எட்டாம் இடத்திலும் நிற்கிறார். 

முதன் முதலாக 2017-இல் இலங்கை வீராங்கனைகளை எதிர்த்து ஆடும் போது கூக்ளி ரக பந்து வீச்சு செய்தேன். எனது கூக்ளி பந்து வீச்சு விரைவாகவும், குறி தப்பாமலும் இருக்க வேண்டும் என்று தனிக் கவனம் செலுத்துகிறேன். பயிற்சியும் செய்கிறேன். 

பெண்களுக்கான ப20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டி தொடங்குவதற்கு முன் நடந்த "இங்கிலாந்து, ஆஸ்திரேலியா' இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. காரணம் கை விரலில் காயம் அடைந்ததால் விளையாட முடியவில்லை. சமீபத்தில் நடந்த ப20 போட்டிகளில் முதல் முறையாக இந்தியா இறுதி ஆட்டத்தில் ஆடத் தகுதிபெற்றது. ஆனால் இரண்டாவதாகத்தான் வர முடிந்தது. பொதுவாக இந்திய அணி நன்றாகத்தான் விளையாடியது. இறுதி ஆட்டத்தில் திறமையாக ஆடிய ஆஸ்திரேலிய அணி வென்றது. 

ரஞஙஉச'ந ஆஐஎ ஆஅநஏ கஉஅஎமஉ ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி. "சிட்னி தண்டர்ஸ்' அணியின் தலைவியான ரேச்சல் ஹெய்ன்ஸ் அவரது அணியில் என்னை விளையாட வைக்க ஆர்வம் காட்டுகிறார். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது பந்து வீச்சு திறமையைக் காட்டுவேன். 

நான் கிரிக்கெட்டில் பங்கு பெறக் காரணம் ஆக்ராவின் பயிற்சியாளர் முகம்மத் அயூப்கான். அவர் பலரை கிரிக்கெட்டில் திறமையான ஆட்டக்காரர்களாக மாற்றியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான ஹேமலதா கலா ஆக்ராவைச் சேர்ந்தவர். அவரது கிரிக்கெட் ஆட்டத்தைக் கண்டு வளர்ந்தவள் நான். கோச் மனோஜ் குஷ்வாக எனது முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறார். எனது அப்பா இந்திய ராணுவத்தில் பணி புரிந்துவிட்டு இப்போது பள்ளி ஒன்றின் முதல்வராக இருக்கிறார். அவர் ஆற்றில் தினமும் நீந்திச் சென்று படித்தவர். தொடர்ந்து கிரிக்கெட் ஆடச் செய்தவர் அப்பாதான். 

வீட்டை நிர்வகிக்கும் அம்மாவிடம் "என்ன உங்க மகள் இரவில் எப்பொழுதும் தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். அவள் அப்படி என்ன வேலை செய்கிறாள்.. கண்டிக்க மாட்டீர்களா..' என்று அக்கம் பக்கத்தவர்கள் கேட்பார்களாம். 

அதற்கு "நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. அவள் எங்கே போகிறாள் என்பது எனக்குத் தெரியும். என் மகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது' என்று அம்மா சொல்லிவிடுவாராம்.

நான் இந்த அளவுக்கு முன்னேறி வரக் காரணம் கிரிக்கெட்டில் பிரபலமான ஒருவர்தான். அவர் என்னிடம் "நீ ஒரு நாளும் இந்தியாவிற்காக விளையாட முடியாது' என்று வெளிப்படையாக முகத்தில் அடிப்பது மாதிரிச் சொன்னார். 

அந்த வார்த்தைகள் என்னை ஆழமாகத் தைத்தன. என்னை நானே கேட்டுக் கொண்டேன், "உன்னால் முடியாதா?' அந்தத் தருணத்திலிருந்து அந்த வார்த்தைகளை சவாலாக எதிர்கொண்டேன். இந்தியாவிற்காக நான் விளையாடிக் காட்டுவேன். அது 2013- லிருந்து பலித்து வருகிறது'' என்கிறார் பூனம் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com