கோடை தொந்தரவு: காக்கும் துத்தி! 

தொடங்கியது கோடை... கூடவே பலருக்கும் நீர் குறைபாட்டினால் உண்டாகும் உடல் உபாதைகளும், நோய்களும் தலைகாட்டத் தொடங்கும். அந்த வரிசையில் பலரையும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
நாச்சாள்
நாச்சாள்



தொடங்கியது கோடை... கூடவே பலருக்கும் நீர் குறைபாட்டினால் உண்டாகும் உடல் உபாதைகளும், நோய்களும் தலைகாட்டத் தொடங்கும். அந்த வரிசையில் பலரையும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என வேறுபாடில்லாமல் தாக்கக்கூடியது மலச்சிக்கலும் மூல நோயும்.

கோடையில் சுட்டெரிக்கும் வெப்பத்தினால் உடலில் இருக்கும் நீர்சத்துகள் குறைவது இயல்பே.. வெயிலில் அலைபவர் களுக்கு மட்டுமல்லாமல் வீட்டிலும், குளிரூட்டப்பட்ட அறையிலும் இருப்பவர்களுக்கும் கூட சுற்றுப்புற வெப்பத்தினால் நீர்சத்துகள் குறையும். அதனால் ஏற்படும் பல பாதிப்புகள் அதிகமான வேதனையையும், வலியையும் அளிக்கக்கூடியது. அதிக புளி, காரம், நார்ச்சத்தில்லாத மாவுச்சத்து கொண்ட உணவுகள், உஷ்ண உணவுகளின் தாக்கத்தால் உடலின் நீர் சத்துகள் குறைவதும், குடலில் புண்கள் ஏற்படுவதும் உண்டு. இந்த கழிவுகளால் மலச்சிக்கலும், பெருங்குடலில் தொந்தரவுகளும் ஆசன வாய் எரிச்சலையும், வலியையும் அதிகரிக்கும். மேலும் நீர்சத்துக்களும் நார்சத்துக்களும் குறைவதால் ஆசனவாய் எரிச்சல், வலி, அரிப்பு என பல தொந்தரவுகளும் ஏற்படுகிறது. இப்படி கோடையில் ஏற்படும் பல தொந்தரவுகளிலிருந்து நம்மை காக்கும் கீரை துத்தி கீரை.
கீரை என்றதும் அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை என ஐந்தாறு கீரைகளை மட்டுமே தெரிந்துவைத்திருக்கும் பலருக்கு இந்த கீரை புதிதாகத்தான் இருக்கும். சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் கீரைகளில் இருக்கும் எந்த ரசாயன நச்சுகளும், பூச்சிக்கொல்லிகளை தெளிக்கப்படாத சத்துகள் நிறைந்த கீரை துத்தி கீரை.

துத்தி கீரையை எவ்வாறு அடையாளம் காண்பது?

அக்ஷன்ற்ண்ப்ர்ய்ஜண்ய்க்ண்ஸ்ரீன்ம்...பருத்தி இனத்தைச் சேர்ந்த ஒரு குறுஞ்செடி. சற்று வெளுத்து பசுமையாக இதய வடிவில் இதன் இலைகள் இருக்கும். மஞ்சள் நிற ஐந்து இதழ் கொண்ட பூக்கள் கொண்டது. இந்த துத்தி பூக்கள், இதன் காய்கள் சக்கரம் போல் இருக்கும். இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்து பாகமும் மருத்துவகுணம் கொண்டது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறந்த சத்தான மலமிளக்கியாகவும் இந்த கீரை பயன்தருகிறது. அன்றாடம் உணவுடன் சேர்த்து கீரையாக சாப்பிடக்கூடியது இந்த துத்திக்கீரை. பல வகைகளில் இருக்கும் இந்த துத்திக்கீரை பொதுவாக அனைத்து இடங்களிலும் காணப்படும் வகை வட்ட துத்தி.எங்கு கிடைக்கும்?
சாலை ஓரங்களில், புதர்கள் மண்டிக்கிடக்கும் இடங்களில் என தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தானாக முளைத்திருக்கும் செடிவகை இந்த துத்தி கீரை. 
பலன்கள் சிறந்த மலமிளக்கி, மூலத்திற்கு சிறந்த மருந்தாக உள்ளது. ஆண்மையை பெருக்கக்கூடியது, பெண்களுக்கு ஏற்படும் அனைத்து கருப்பை கோளாறுகள், மாதவிடாய் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் போன்ற தொந்தரவுகளை அகற்ற கூடியது. வாய், பற்கள், இரைப்பை முதல் பெருங்குடல், ஆசனவாய் வரை ஏற்படும் புண், வலி, எரிச்சல் என அனைத்து தொந்தரவுகளையும் போக்கக்கூடியது.

தோலில் ஏற்படும் கட்டிகள், புண், படர்தாமரை போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக உள்ளது. பக்கவாதம், நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள், கல்லீரல் நோய்கள், புற்றுநோய்க்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது.

பயன்படுத்தும் முறைகள்

துத்தி கீரையை (மிளகாய் சேர்க்காமல்) சிறுபருப்பு, சின்னவெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து கூட்டாக செய்து உண்பதால் மலச்சிக்கல் தீரும், ரத்தக்கசிவு, மூலநோயிலிருந்து விடுபடலாம்.

அவ்வப்பொழுது இந்த கீரையை உண்பதால் தசைகள் பலப்படும். உடல் பருமனுக்கும் சிறந்த மருந்தாக இருக்கும்.இதனால்தான் இது "அதிபலா' என்று அழைக்கப்படுகிறது.

ஆசனவாய் எரிச்சல், வலி இருக்க இந்த துத்தி கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்டிவர நிவாரணம் பெறலாம்.

துத்தி இலையினை நீரில் கொதிக்க வைத்து பருக வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

துத்தி பூக்களை உண்பதால் தாதுபலம் பெறலாம்.

துத்தி பூக்களை பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி பருக நுரையீரல் தொந்தரவுகள், ஆஸ்துமா, கபம், இருமல், இரைப்பு, காசநோயிலிருந்து விடுபடலாம்.

துத்தி சமூலத்தை (இலை, பூ, காய், தண்டு, வேர் என அனைத்து பாகத்தையும்) கஷாயமாக வைத்து பருக ஆண்மை அதிகரிக்கும்.

துத்தி இலையை நீரில் கொதிக்கவைத்து வாய் கொப்பளிக்க பற்களில் ஏற்படும் வழிகள், பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

துத்தி வேர்களை நீரில் கொதிக்கவைத்து அருந்துவதால் நரம்பு மண்டலம் பலம்பெறும்.

துத்தி வேர், மூக்கிரட்டை கீரை இரண்டையும் சேர்த்து நீருடன் காய்ச்சி தேன் கலந்து அருந்த சிறுநீரகம் பலம்பெறும்.

பிதுத்தியில் இருக்கும் கொழுப்பு மற்றும் புரதம் உடலின் வலிகளை நீக்கக்கூடியது. மைய அரைத்து சின்னவெங்காயம், மோர் கலந்து பருக பல நன்மைகள் ஏற்படும்.

தோல் நோய்களுக்கு துத்தி இலையை அரைத்து பூச விரைவாக குணம் பெறலாம்.

உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு துத்தி சமூலத்தை நீரில் காய்ச்சி ஒத்தனம் கொடுக்கலாம். வலிகளுக்கு இதனை மைய அரைத்து பற்று போட நிவாரணம் பெறலாம்.

துத்தி இலையை பசுநெய்யுடன் வதக்கி சுடுசாதத்தில் சேர்த்து உண்பதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், கருப்பை கோளாறுகள் அகலும்.

இப்படி பல பல நன்மைகளையும் அளிக்கும் கீரையை கோடையில் முடிந்தவரை உண்பது உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். சாலையோரங்களில் கிடைக்கும் இந்த கீரையின் விதைகளை சேகரித்து எளிமையாக விதைகள் மூலம் வீட்டுத்தோட்டத்திலும் வளர்க்கலாம். நாற்பது வயதை தாண்டியவர்கள், பெண்குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய கீரையிது. தேவைக்கேற்ப எந்த பூச்சிக்கொல்லிகளும் ரசாயன நச்சுகளும் கலக்காத ஆர்கானிக் கீரையான துத்தியை இனி பயன்படுத்தி பல பல நன்மைகளை பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com