கலக்கும் பெண் ரோபோ

இதுவரை ஜவுளிக்கடைகளில் அழகான பொம்மைகள் அழகான ஆடை அணிந்து கடையின் முன் புறம் நிற்க வைத்து ஆடைகளின் விளம்பரத்துக்குப் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள்.
கலக்கும் பெண் ரோபோ


இதுவரை ஜவுளிக்கடைகளில் அழகான பொம்மைகள் அழகான ஆடை அணிந்து கடையின் முன் புறம் நிற்க வைத்து ஆடைகளின் விளம்பரத்துக்குப் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள். ஆனால், தமிழகத்தில் ஒரு பெரிய ஜவுளிக்கடையில் சேலை கட்டிய அழகான பெண் ரோபோ, ஒன்று கடைக்குள் தானாக நகர்ந்து வாடிக்கையாளர்களை நோக்கி சென்று நிற்கிறது. அதன் கைகளில் இருக்கும் கிருமி நாசினி பாட்டில் முன்பு வாடிக்கையாளர்கள் கைகளை நீட்டினால் சானிடைஸர் திரவம் வருகிறது. ஜவுளிக்கடையின் இந்தத் தொழில் நுட்ப யுக்தி அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
சில மாதங்களாகவே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக் கவசம் அணிதல், கிருமி நாசினியைப் பயன்படுத்திக் கைகளைச் சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை கட்டயமாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன்படி, மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைகளைச் சுத்தம் செய்ய வைக்கின்றனர்.

அந்த வகையில், மதுரையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் சேலை கட்டிய பெண் ரோபோ ஒன்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தானாக நகர்ந்து சென்று கிருமி நாசினியை விநியோகிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இணையத்தில் இந்த வீடியோவை கண்ட இந்திய வனத்துறை அதிகாரி சுதாராமன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ""தமிழ்நாட்டில் ஒரு ஜவுளிக்கடை ஷோரூமில் ஒருவர் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். பெண்களைப் போல சேலை கட்டிய ரோபோ மனிதர்களைத் தேடி நடந்து சென்று ஹாண்ட் சானிடைஸர் வழங்குகிறது. இதைப் பார்த்ததும், கரோனாவுக்குப் பிறகு தீவிரமான தொழில்நுட்ப பரிணாமங்கள் ஏற்படப்போவது உறுதி என்று தோன்றியது'' என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com