100 வயது சிலை!

1983-ஆம் ஆண்டு நவராத்திரியில் என் திருமணத்திற்கு பிறகு என் மாமனார் வீட்டில் வைத்த கொலுவில் கவலை தோய்ந்த முகத்துடன் கன்னத்தில் கை வைத்தபடி இருக்கும் அந்த பாரத மாதா சிலை என் கவனத்தை கவர்ந்தது
100 வயது சிலை!

1983-ஆம் ஆண்டு நவராத்திரியில் என் திருமணத்திற்கு பிறகு என் மாமனார் வீட்டில் வைத்த கொலுவில் கவலை தோய்ந்த முகத்துடன் கன்னத்தில் கை வைத்தபடி இருக்கும் அந்த பாரத மாதா சிலை என் கவனத்தை கவர்ந்தது. இந்த ஆண்டு நவராத்திரியில் அந்த சிலைக்கு வயது 100. 1908-ஆம் ஆண்டு பிறந்த என் மாமனார் தென்காசி வழக்கறிஞர் டி.எஸ். இராமநாத ஐயர் அவருடைய 12 வயதில் அதாவது 1920-ஆம் ஆண்டு நவராத்திரியில் தென்காசி நவராத்திரி பொம்மை விற்பனையில் இந்த பொம்மையைப் பார்த்து வாங்க வேண்டுமென சொல்லியிருக்கிறார். பின்னாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜனங்கள் வைத்தியநாதர் ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் செய்த பொழுது வைத்தியநாத ஐயரின் வேண்டுகோளின் படி அவருடைய நண்பரும் என் மாமனாரின் தந்தையுமாகிய தென்காசியில் இந்த ஆண்டு நூற்றாண்டை கொண்டாடும் முன்சீப் கோர்ட்டின் வழக்கறிஞருமான சஹஸ்ரநாம ஐயர் (கீழப்பாவூர் ராம ஐயர் தலைமையில்)
 மதுரைக்கு அர்ச்சகர்களை அனுப்பிய தேசியவாதி மகிழ்ந்து பொம்மையை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
 1920-இல் இந்திய சுதந்திர போராட்டம் காந்தியின் தலைமை சுயாட்சி என்ற கோஷத்துடன் சத்தியாகிரக ஆயுதத்தை கையில் எடுத்து போராடிய காலமது "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்'" என்ற பாட்டை பாரதி எழுதிய காலகட்டமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பாட்டின் கருத்தை விளக்குவது போல் சோகத்தில் இடது கையை மடக்கிய படி வலதுகையை கன்னத்தில் வைத்து சோகத்தில் இருப்பது போல் வெள்ளைப் புடவையை அணிந்த பாரத அன்னையின் சிலை அது. அவளது காலடியில் இந்து மகா கடலும் அதில் தாமரை மொட்டாக இலங்கையும் பாரத அன்னையின் சேலையையே இந்தியாவாக கற்பனையில் உருவாக்கிய அற்புதமான சிலை அது.
 இந்த சிலை வாங்கப்பட்டதிலிருந்து நூறாமாண்டு. இந்த சிலையின் காலடியில் காந்தி மகான் சிலையை வைத்து எங்கள் வீட்டு வரவேற்பரையை அலங்கரித்திருக்கிறோம். நவராத்திரியின் போது பாரத தாய் சிலை கொலுவுக்கு இடம் மாறி விடும். கொலு முடிந்தவுடன் பாரத அன்னை சிலை "பெட்டிச் சிறைக்குள்" போகாமல் வரவேற்பறையில் கம்பீரமாக நிற்பாள். இந்த சிலையின் வலது கையை நீட்டி அமைத்து அதில் பாரத அன்னை இந்திய மூவர்ண கொடியை பிடித்திருப்பது போல் மாற்றி அமைக்க வேண்டுமென்பது என் ஆசை.
 - நந்தினி ரமணன்
 தென்காசி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com