ரீல் - ரியல் லைப்புக்கும் ஒற்றுமை!

"கேளடி கண்மணி' தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர். திவ்யா பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. கன்னடத்தில் 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ரீல் - ரியல் லைப்புக்கும் ஒற்றுமை!

"கேளடி கண்மணி' தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர். திவ்யா பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. கன்னடத்தில் 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் கன்னடத்தில் "ஆகாச தீபம்' என்ற தொடர் மூலமாக சின்னத்திரை நடிகையானார். தற்போது தமிழில் "மகராசி' தொடரில் லீட் ரோலில் நடித்து வரும் திவ்யா இந்த சீரியல் குறித்து கூறுகிறார், "தமிழில் மகராசிதான் நான்முதன்முறையாக லீட் ரோல் செய்யும் தொடர். என்னோடு பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் எல்லாம் இருக்காங்க. அவுங்க முன்னாடி நான் ஒரு சின்ன குழந்தை மாதிரி. ஒவ்வொரு சீனும் டைரக்டர் சொல்லும்போதும், நீதாம்மா மகராசி டைட்டில் கேரக்டர் அதனால நல்லா பண்ணனும்னு சொல்லுவார். அது எனக்கு ஏதோ பெரிய பாரத்தை என்மேல் தூக்கி வெச்சிருப்பது போன்று உணருகிறேன். கொஞ்சம் பயமாகவும் இருக்கு. மகராசி எனக்கு கிடைத்த ஒரு நல்ல புரோஜக்ட். இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த சன் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும். இதில் பாரதிங்கிறது என் கேரக்டர். ரொம்ப பொருமையா, அதே சமயம் போல்டான கேரக்டர். என்னுடைய ரியல் லைப்புக்கும், இந்த ரீல் லைப்புக்கும் சில ஒற்றுமை இருக்கு. ஏன்னா இந்த கேரக்டர்ல வருகிற பாரதி மாதிரிதான் நிஜத்திலும் ரொம்ப பேசமாட்டேன். சைலண்ட்டான பொண்ணு'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com