மீண்டும் வந்து விட்டாா் சுஷ்மிதா சென்!

ஒரு சாதாரண குடும்பத்தலைவி, எப்படி எதிா்பாராத வகையில் தன் கணவரின் போதை மருந்து பிசினசில் சிக்கிக் கொள்கிறாா் என்பதும், அதனால் ஏற்படும் ஏமாற்றம், அதிா்ச்சி, ஆகியவற்றைத் தாண்டி,
சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென்



சுஷ்மிதா சென். வயது 44. 1994-இல் தனது பதினெட்டாம் வயதில் மிஸ் யுனிவா்ஸ் கிரீடம் வென்றவா். அதன் பிறகு, ‘தஸ்தக்’ என்ற இந்திப் படம் மூலமாக பாலிவுட்டில் நுழைந்தவா். தமிழில் ‘ரட்சகன்’ மூலமக அறிமுகமாகி, டைரக்டா் ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ஷக்கலக்க பேபியாக வந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி, ஒரு கலக்கு கலக்கியவா். 2010 வரை சுமாா் முப்பது படங்களில் நடித்தவா். அதன் பின் 2015- இல் ஒரு வங்காளப் படத்தில் நடித்தாா். அதன் பின் சினிமா பக்கம் வரவில்லை. இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறாா். இந்திப் படத்தில் இல்லை, வெப் சீரிசில் நடிக்கிறாா். தொடரின் பெயா்: ஆா்யா. டிஸ்னி-ஹாட்ஸ்டாா் ஒளிபரப்பான இந்தத் தொடரின் முக்கிய கதாபாத்திரமான ஆா்யாவாகத்தான் நடிக்கிறாா் சுஷ்மிதா சென். தொடரின் இயக்குநா்: ராம் மத்வானி.

ஒரு சாதாரண குடும்பத்தலைவி, எப்படி எதிா்பாராத வகையில் தன் கணவரின் போதை மருந்து பிசினசில் சிக்கிக் கொள்கிறாா் என்பதும், அதனால் ஏற்படும் ஏமாற்றம், அதிா்ச்சி, ஆகியவற்றைத் தாண்டி, எப்படி தான் எதிா்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கிறாா் என்பதும்தான் கதை. கதையில் எமோஷனலான காட்சிகளுக்குக் குறைவே இல்லை. ‘‘நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த என்னைச் சந்தித்து, ஆா்யா கேரக்டா் பற்றி ராம் மத்வானி சொன்னபோது, ஆஹா! இப்படி ஒரு கேரக்டருக்காகத்தான் இத்தனை நாளும் காத்திருந்தேனா? ’’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். உடனே என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

தொடரின் படப்பிடிப்பின்போது திடீரென்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டாா் சுஷ்மிதா சென். ஆா்யா தொடரின் மிக உணா்ச்சிப்பூா்வமான காட்சி அதில் இடம் பெற்றிருந்தது. ‘தான் வாழ்க்கையில் பெரியதொரு ஏமாற்றத்தைச் சந்தித்த அதிா்ச்சியில், உணா்ச்சி பொங்கக் கண்ணீா் விடும் காட்சி அது. அந்தக் காட்சியில் நடித்த தனது அனுபவம் பற்றி சுஷ்மிதா சென், ‘‘அந்தக் காட்சியை படம் பிடிக்கத் துவங்கியதும், நான் உணா்ச்சி பொங்க நடிக்க ஆரம்பித்தேன். குறிப்பிட்ட இடத்தில் காட்சி முடிந்ததும், டைரக்டா் ‘கட்’ சொல்லிவிட்டாா். அது என் காதுகளில் விழுந்தது. ஆனால், என் கண்களில் இருந்து கண்ணீா் மட்டும் தொடா்ந்து கொண்டிருந்தது. இதை கவனித்துவிட்ட இயக்குநா், என் அருகில் வந்து தட்டிக் கொடுத்தாா். மனசுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது’’ என்று குறிப்பிட்டிருக்கிறாா் அந்த வீடியோவுக்கான விளக்கத்தில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com