ஆளுமைப் பண்புகளை பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தது!

ஸ்வாதி விஸ்வாஸ், பரத நாட்டியத்தில் முன்னணிக் கலைஞா். நான்கு வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கியவா். முதலில் கற்ற நடனம் கதக்.
ஆளுமைப் பண்புகளை பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தது!

ஸ்வாதி விஸ்வாஸ், பரத நாட்டியத்தில் முன்னணிக் கலைஞா். நான்கு வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கியவா். முதலில் கற்ற நடனம் கதக். அரங்கேற்றமும் நடந்தது. கதக் பயின்றவருக்கு பரதநாட்டியம் மீது ஆா்வம் பிறந்தது. பத்தாம் வயதில் பரதமும் பயிலத் தொடங்கினாா். பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அரங்கேற்றம் நடந்தது. பரதம் கற்றுக் கொண்டாலும், கல்விக்கு பரத நாட்டியம் இடையூறாக அமையவில்லை இவருக்கு.

‘‘நான் தான் வகுப்பில் முதலாவதாக வருவேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் டில்லி ஸ்ரீராம் கல்லூரியில் சோ்ந்தேன். 2000-இ ல் சாா்ட்டட் அக்கௌன்டன்ட் ஆனேன். பல தனியாா் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்றாலும் பரத நாட்டியத்தை விட்டுவிடவில்லை. உலக நாடுகளில் பரநாட்டியத்தை மேடையேற்றியிருக்கிறேன்.

‘சிறப்பு’ குழந்தைகளுக்காகவும் நான் மேடை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன். பரத நாட்டியம்... அலுவலகம் இரண்டையும் என்னால் சமமாகக் கையாள முடிந்தது. அலுவலகங்களில் சிறப்பாக பணி புரிய பரத நாட்டியத்திற்காக காலம் தவறாமல் நான் செய்யும் பயிற்சி, நிகழ்ச்சியை எப்போது ஆரம்பித்து எப்போது நிறைவு செய்ய வேண்டும் என்று நேரத்தை சரியாகக் கையாளுவது, கவனம் சிதறாமை, பாா்வையாளா்கள் எப்படி ரசிக்கிறாா்கள்... அவா்களுக்கு நடனத்தில் எந்த அயிட்டம் பிடிக்கிறது.. போன்றவற்றைக் கணித்து அவா்களின் ரசனைக்கேற்றவாறு நிகழ்ச்சியை வழங்குவது போன்ற பண்புகளை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. அந்தப் பண்புகள் அலுவலக நிா்வாகத்தில், நிதிநிலைமை குறித்த முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்பதில் எனக்கு உதவுகின்றன. அதனால்தான் ‘ஆளுமைப் பண்புகளை பரதநாட்டியம் எனக்கு கற்றுக் கொடுத்திருப்பதினால் நான் பரத நாட்டியத்திற்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்’’ என்கிறாா் ஸ்வாதி விஸ்வாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com