அற்புதமான அழகு குறிப்புகள்

பகல் முழுவதும் வெயிலில் சென்று வேலை பார்க்க வேண்டிய ஆண்களும் சரி பெண்களும் சரி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள இந்த எளிய இயற்கை முறைகளைப் பின்பற்றினால் சரியான தீர்ள
அற்புதமான அழகு குறிப்புகள்


பகல் முழுவதும் வெயிலில் சென்று வேலை பார்க்க வேண்டிய ஆண்களும் சரி பெண்களும் சரி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள இந்த எளிய இயற்கை முறைகளைப் பின்பற்றினால் சரியான தீர்ள அளிக்கும்:

கற்றாழை

கற்றாழை இயற்கையிலேயே நல்ல குளுமை குணம் கொண்டது. சருமம் பழுப்படைந்த இடத்தில் கற்றாழையை பேஷியல் பேக் போலத் தடவி 5 -10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் நல்ல பலனை பெறலாம்.

சந்தனம்

அதிக குளிர்ச்சி தன்மை உடைய இயற்கை பொருள் சந்தனம். வெளியில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பளடர்களை வாங்காமல் நீங்களே இழைத்து உபயோகப்படுத்தும் சந்தனத்தை பயன்படுத்துங்கள் நன்கு அரைத்த சந்தனத்தை நீரில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் புத்துணர்ச்சி அடையும்.

வெள்ளரிக்காய்

இதை அப்படியே சாப்பிடுவது உடலிற்கு மிகளம் நல்லது. வட்ட வட்டமாக நறுக்கிய வெள்ளரி காய்களை உங்கள் முகத்தில் வைத்து கால் மணி நேரம் கழித்து முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இதையே எலுமிச்சைச் சாறு அல்லது பன்னீரும் கலந்து பயன்படுத்தினால் முகம் மிகளம் புத்துணர்ச்சி அடையும்.

எலுமிச்சை

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் உங்கள் சருமம் பழுப்படைந்து இடம் சூரிய ஒளி அதிகம் பட்ட இடத்தில் நன்றாகவே நிற மாற்றம் அடைந்
துள்ளதைக் காணலாம். எலுமிச்சை சாற்றை உடலில் நன்கு தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் நீராடினால் நல்ல தீர்ள கிடைக்கும்.

தக்காளி

ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறு தயிர் மற்றும் ஓட்ஸ் எடுத்துக் கொண்டு நன்கு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும் தயார் செய்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்கவேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவேண்டும் இந்த பேஸ்ட்டை முகத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முகம் பொலிவாக இருக்கும். தக்காளியில் உள்ள ஆன்டி ஏஜிங் பண்புகள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் வயதான தோற்றத்தைத் தடுக்கும். மேலும் சூரிய வெளிச்சத்தால் சருமம் பாதிக்காமல் கோடை காலத்தில் சருமத்திற்கு உதளம் ஒரு தோழனாகப் பயன்படும் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com