ரத்த அடைப்பைப் போக்கும் பேபி கார்ன்!

பேபி கார்ன் என்பது ஆரம்ப மக்காச்சோளத்தின்  பிஞ்சாகும். இந்த பேபி கார்னின் தண்டுகள் மிகவும் மென்மையாக இருப்பதால், அதன் தண்டுகளோடு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.
ரத்த அடைப்பைப் போக்கும் பேபி கார்ன்!

பேபி கார்ன் என்பது ஆரம்ப மக்காச்சோளத்தின்  பிஞ்சாகும். இந்த பேபி கார்னின் தண்டுகள் மிகவும் மென்மையாக இருப்பதால், அதன் தண்டுகளோடு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். 

சோளத்துடன் ஒப்பிடும்போது பேபி கார்னில் குறைவான கலோரி உள்ளது மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு என்பது சுத்தமாக இல்லை.

பேபி கார்ன் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்று. இதனை தினசரி உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது இந்த பேபி கார்ன்கள் கான்டினென்டல் மற்றும் ஆசிய உணவு வகைகளில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டன. இது சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது. பேபி கார்னில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ, ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தெனிக் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. 

எடையை குறைக்க உதவும்:

பேபி கார்னில் கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகளும் குறைவாக உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க வழக்கமான உணவுடன் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும் சோளத்துடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் குறைவான மாவுச்சத்து உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே எடை  குறைப்பு பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பேபி கார்ன்களை பச்சையாகவோ, வேகவைத்தோ அல்லது நெருப்பில் வாட்டியோ சாப்பிடலாம். மேலும் பேபி கார்னில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்ட பிறகு, அது ஜீரணிக்க நிறைய நேரம் எடுக்கும். இதன் காரணமாக பேபி கார்ன் சாப்பிட்டவர்களை அதிக நேரம் முழுமையானதாக உணர வைக்கும்.

கண்பார்வை மேம்படுத்த உதவும்:

நாம் அன்றாடம் டிஜிட்டல் ஸ்க்ரீன்களில் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில், பேபி கார்ன்களை சாப்பிடுவது மிக அவசியம். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனால் கண் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் ஏ -யின் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நம் கண்களைப் பராமரிக்கலாம். 

கரோட்டினாய்டு தாவரங்கள் மற்றும் பாசிகளில் காணப்படும் ஒரு வகை நிறமி ஆகும். இது மஞ்சள், சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. இது நம் உடலுக்குள் நுழையும் போது, அது அடிக்கடி வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. உடலில் குறைந்த அளவு வைட்டமின் ஏ அறிகுறிகள்  மாலைக்கண் நோய் மற்றும் அபாயகரமான நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதுவே பேபி கார்ன்களை சாப்பிட்டால் அதனை தவிர்க்கலாம்.

சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்:

மனித தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்தது. அதற்கு சரியான கவனிப்பும் ஊட்டச்சத்தும் அவசியம் தேவை. நம் நகங்கள், முடி மற்றும் தோல் இவற்றின் மீது சரும பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியாது. இவை ஆரோக்கியமாக இருக்க நாம் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நமது சருமம் பொதுவாக சூரியனின் தூசி, மாசு மற்றும் புற ஊதா கதிர்களால் பாதிக்கப்படுகிறது. இது நம் சருமத்தை மந்தமாக்குவதோடு, அரிப்பு அல்லது நிறமி போன்ற பிரச்னைகளை உருவாக்குகிறது. எனவே நமது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிட வேண்டிய உணவுகளில் பேபி கார்னும் ஒன்று. ஏனெனில் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இவை சரும செல்களை சரி செய்ய உதவுகின்றன. இதுதவிர உடலின் தோல் அடுக்குகளை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.

பிற ஆரோக்கிய நன்மைகள்:

பேபி கார்னில் ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்ப காலங்களில் பேபி கார்னை பெண்கள் சாப்பிடுவது மிக அவசியம். ஏனெனில் ஃபோலிக் அமிலம் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பேபி கார்னில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதேபோல தமனி அடைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் குறைக்கிறது. இதில் உள்ள வேறு சில ஊட்டச்சத்துக்களான துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவை ஒருவருக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com