திரும்பிப் பார்க்க வைத்த தமிழக பிரபலங்கள்

மகளிர் தினத்தையொட்டி பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கும்  விதமாக  உலகையே திரும்பி பார்க்க வைத்து தமிழகத்துக்குப் பெருமை சேர்ந்த பெண்கள் சிலரை பற்றி இதோ:
திரும்பிப் பார்க்க வைத்த தமிழக பிரபலங்கள்

மகளிர் தினத்தையொட்டி பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக உலகையே திரும்பி பார்க்க வைத்து தமிழகத்துக்குப் பெருமை சேர்ந்த பெண்கள் சிலரை பற்றி இதோ:

ஜெயலலிதா

இந்தியாவில் அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெயலலிதா .

ஜெயலலிதா முதல்வர் பதவியில் 5539 நாள்களுக்கு மேல் அவர் பதவி வகித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக நாள்கள் முதல்வர் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அவரது சாதனையை முறியடிக்கும் வகையில் இப்போதைக்கு யாருமே இல்லை என்பதால் நீண்ட காலத்திற்கு இந்த சாதனை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசத் திட்டங்களையும் அதிக அளவில் அமல்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக ஜெயலலிதா பெயரிலான அம்மா திட்டங்கள் ஜெயலலிதா ஆட்சியின் முக்கிய அம்சமாக, அடையாளமாக மாறியது. ஜெயலலிதாவின் சாதனையும், அவரது புகழும் என்றுமே நீடித்திருக்கும்.

மருத்துவர் சாந்தா

மருத்துவர் சாந்தாவின் தன்னலமற்ற சேவைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து சமீபத்தில் மறைந்தவர். தன்னுடைய சேவையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை மேம்படுத்தி, நவீன வசதிகளைக் கொண்டு வந்து, புற்று நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்தவர்.

புற்றுநோய் சிகிச்சைக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்துக்கொண்டவர் சாந்தா. இந்த தன்னலமற்ற பணிக்காக பத்ம விருது, மகசாசே விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கை நாயகியாக விளங்கியிருக்கிறார். பரிவுடன் கூடிய தன்னலமற்ற மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவர்களுக்கான முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் டாக்டர் சாந்தா.

நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் "இரும்புப் பெண்மணி' என்று வர்ணிக்கப்பட்ட மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்னர், முழுநேர பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.
1999-2004 வரை வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் போது, 2003-2005 காலகட்டத்தில் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் பணியாற்றினார்.

2006-ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். 2010-ஆம் ஆண்டில் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

2014-ஆம் ஆண்டுத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்ததும், நிர்மலா சீதாராமன் தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

2016- ஆம் ஆண்டு கர்நாடகத்திலிருந்து அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரானார். தற்போது நிதியமைச்சராக உள்ளார்.


இந்திரா நூயி

சென்னையைச் சேர்ந்தவர் இந்திரா நூயி. கடந்த 12 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பதவி வகித்தவர்.

"போர்ப்ஸ்' இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் 13 -ஆவது இடமும், "பார்ச்சூன்' இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடமும், பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதன் தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி. இசை ஆளுமையாக விளங்கும் இவர், "சங்கீத கலாநிதி', "பத்மபூஷண்', "பத்மஸ்ரீ' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக இசைப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கர்நாடக இசையைப் பிரபலப்படுத்தவும், சமூகத்துக்காகவும், மாநிலத்தின் கலை மற்றும் கலாசாரத்திற்காகவும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

700 பாடகர்கள், இசைக்கலைஞர்கள் கச்சேரி நடத்த ஆயிரத்து 183 குச்சிபுடி நடனக் கலைஞர்கள் ஆடினார்கள். இதன் மூலம் 3 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் சுதா ரகுநாதன் தலைமையிலான குழுவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com