முகம் பொலிவடைய ரோஜா இதழ்!

ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. பன்னீர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்னைக்கு ஓர் சிறந்த தீர்வினை காணலாம்.
முகம் பொலிவடைய ரோஜா இதழ்!


ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. பன்னீர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்னைக்கு ஓர் சிறந்த தீர்வினை காணலாம்.

ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.

பயத்தம் பருப்பு மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவினால் முகம் பொலிவு பெரும்.

வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடல் நறுமணம் உண்டாகும்.

ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சோப்புக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com