வெள்ளரிக்காய் மருத்துவப் பயன்கள்!

வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது.
வெள்ளரிக்காய் மருத்துவப் பயன்கள்!

வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது.

வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கு வறட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். சிறுநீர் பிரிவைத் தூண்டச் செய்து, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

பித்தநீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குகிறது.

கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்கிறது.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் வயிற்றுப்புண் குணமாகும்.

காலரா நோயாளிகள் வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை சாறாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

வறண்ட தோல், காய்ந்துவிட்ட  முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் அதன் சாறு சாப்பிட்டு வந்தால் வறட்சித் தன்மையைப் போகும்.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் போய்விடும். 

நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.

வெள்ளரியில் தாதுப் பொருள்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன் மற்றும் குளோரின் ஆகியவை உண்டு.

ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் வெள்ளரிக்காயில் அதிகம் உண்டு. மேலும் இது ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com