கிர்ணி பழத்தின் சிறப்புகள்!

மேற்கத்திய நாடுகளில், கிர்ணி பழத்தை காண்டலூப்ஸ் என்று அழைக்கிறார்கள்.
கிர்ணி பழத்தின் சிறப்புகள்!

மேற்கத்திய நாடுகளில், கிர்ணி பழத்தை காண்டலூப்ஸ் என்று அழைக்கிறார்கள். கிர்ணி பழத்தின் வாசனை பலருக்கும் பிடிப்பதில்லை என்றாலும், இந்த பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் உள்ள ஊட்டச் சத்துகளை அறிந்து கொண்டால், அதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள். கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

நுரையீரலின் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும், தலைசிறந்த உணவுகளில் கிர்ணி பழம் முதலாவதாக  உள்ளது.

கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது. இதன் ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. 

கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கும் நல்லது.

கிர்ணி பழத்தை நன்றாகப் பார்த்து வாங்க வேண்டும் பழுத்த கிர்ணி பழத்தை எளிதாக காம்பிலிருந்து பிரித்தெடுக்க முடியும். காம்பின் முனையில் நுகர்ந்து பார்க்கும்போது, பழம் வாசனை வராவிட்டால், அது பழுக்காத கிர்ணிபழமாக இருக்கக் கூடும். அதே போல, கிர்ணி கீழே விழுந்து அடி பட்டிருந்தாலும், உள்ளே இருக்கும் பழத்திற்கு சேதம் இருக்காது.

வெட்டிய உடனே கிர்ணி பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும். பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டு விட்டீர்கள் என்றால், அதன் ஊட்டச்சத்துகள் குறைந்து விடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்.

இந்த வெயில் சீசனுக்கு, குழந்தைகளுக்கு கிர்ணி ஜூûஸ தினமும் கூட கொடுக்கலாம். மிக்ஸியில் சிறு துண்டுகளாக இதை நறுக்கி, கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அடித்துக் கொடுக்கலாம். உடலை குளிர்ச்சியாக வைக்க இது உதவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com