எகிப்து நீதித்துறையில் சமீபத்தில் 98 பெண் நீதிபதிகள் பதவி ஏற்றுள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில், பெண்கள் முதன்முறையாக நீதித்துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதுவரை, ஆண்களின் கோட்டையாக இருந்த எகிப்து நீதித்துறையில், பலமுறை விண்ணப்பித்தும் பெண்கள் நிராகரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி, சில மாதங்களுக்கு முன், நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என எண்ணினார். இதையெடுத்து, பெண்களுக்கு முறையான பயிற்சி அளித்து பதவி பிரமானம் செய்து வைத்துள்ளார்.