சாதனை விஞ்ஞானி

பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் மூலிகைச் செடிகளின் மருத்துவக் குணத்தை அறிந்திருந்தனர்.
சாதனை விஞ்ஞானி

பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் மூலிகைச் செடிகளின் மருத்துவக் குணத்தை அறிந்திருந்தனர். இவற்றை மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மூலிகைகளின் மருத்துவக் குணத்தின் உயிரியல் சார்ந்த அம்சங்கள் அசீமா போன்ற விஞ்ஞானிகளின் ஆய்வு மூலமே வெளிச்சத்துக்கு வந்தன. அசிமா வேதியியல் துறையில் சிறந்த ஆய்வாளர். அதிலும் குறிப்பாக மருத்துவ வேதியலில் ஆர்வம்கொண்டு, மூலிகைகளின் மூலக்கூறுகளைப் பிரித்தறிவதில் முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.

வேதியலின் முக்கிய அங்கமான இயற்கை வேதியலின் கீழ் வரும் இயற்கை பொருள்களின் வேதியல் எனும் பிரிவில் இடம்பெறும் இந்த வகை ஆய்வுகள் எளிதானவையல்ல. அதிலும் ஆரம்ப கால கட்டத்தில் முறையான வசதிகள் மற்றும் நவீன உபகரணங்கள் இல்லாமலே அசிமா, இதற்கான ஆய்வில் ஓய்வில்லாமல் ஈடுபட்டுச் சாதித்திருக்கிறார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஒருவிதத்தில் அசிமாவின் குடும்பப் பாரம்பரியமும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது. அசிமா 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். அவரது தந்தை நாராயண் முகர்ஜி மருத்துவர். அவரது சகோதரர் சராஷி ரஞ்சன் முகர்ஜியும் பின்னாளில் சர்ஜனாகப் புகழ்பெற்று விளங்கியவர். 1936-இல் வேதியலில் பட்டம் பெற்ற அசிமா, 1938-இல் இயற்கை வேதியலில் முதுகலை பட்டம் பெற்றார். 1940-இல் கொல்கத்தாவின் லேடி பிராபோர்னே கல்லூரியில் வேதியல் துறை நிறுவனத் தலைவராகப் பணிக்கு சேர்ந்தார். 1944-இல் அவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, டாக்டர் பட்டமும் பெற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு அசிமா, மூன்று ஆண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்கப் பேராசிரியர்களுடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்டார். இங்குதான் அவருக்கு ஆல்கலாய்ட்கள் தொடர்பான ஆய்வின் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டது. 1950-இல் இந்தியா திரும்பியதும் அவர் ஆல்கலாய்ட் மற்றும் கவ்மரின் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். இவற்றில்தான் அவர் பல சாதனைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com