கோதுமை  இலை  கொழுக்கட்டை

கோதுமைமாவை ஆவியில் வேக வைத்து எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.
கோதுமை  இலை  கொழுக்கட்டை


தேவையானவை:

கோதுமை மாவு - 250 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

கோதுமைமாவை ஆவியில் வேக வைத்து எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். பிசைந்த மாவில் சிறு சிறு உருண்டைகள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், தேங்காய்த் துருவலுடன் பொடித்த வெல்லம் ஏலப்பொடி சேர்த்து பூரணம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவு உருண்டையையும் எண்ணெய்த் தடவிய சிறிய வாழை இலை மீது வட்டமாகத் தட்டி நடுவில் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து இலையுடன் இரண்டாக மடிக்க வேண்டும். இதை ஆவியில் வேக வைத்து பிறகு பரிமாற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com