அமெரிக்க நீதி துறையில் இந்திய பெண்மணி!

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வனிதா குப்தாவை அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக  நியமிக்க, பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க நீதி துறையில் இந்திய பெண்மணி!


இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வனிதா குப்தாவை அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக  நியமிக்க, பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

வனிதா குப்தா, சமூக உரிமைகள் தொடர்பான விஷயத்தில், அமெரிக்காவில் தலைச்சிறந்த வழக்கறிஞராக இருந்து வருகிறார்.  ஒபாமா அதிபராக இருந்தபோது, உதவி அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியும் உள்ளார்.

தற்போது,  ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின், நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவியான, இணை அட்டர்னி ஜெனரலாக, வனிதா குப்தா பதவி ஏற்கிறார்.

அவரது நியமனத்தை உறுதி செய்வதற்காக, பார்லிமென்டின் செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம், 100 உறுப்பினர்கள் உள்ள செனட் சபையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கு தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர்.  

குடியரசு கட்சியின் லிசா முர்கோவ்ஸி ஆதரித்து ஓட்டளித்ததால், 51 - 49 என்ற ஓட்டு விகிதத்தில், வனிதா குப்தா நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அவரது இந்த நியமனத்துக்கு, அமெரிக்க வாழ் இந்தியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கறுப்பினத்தவருக்கு எதிரான இனவெறி தொடர்பான வழக்குகளில் வென்றுள்ள வனிதா குப்தாவுக்கு, கறுப்பின மக்களும் ஆதரவும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com