வெண்டைக்காய் சூப்
By அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. | Published On : 04th August 2021 06:00 AM | Last Updated : 09th August 2021 04:28 PM | அ+அ அ- |

தேவையானவை:
வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்)
சாதம் - ஒரு கப்
வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய்யை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.