இரட்டைக் குழந்தைகள் அதிகரிப்பு ஏன்?
By - ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் | Published On : 04th August 2021 06:00 AM | Last Updated : 04th August 2021 06:00 AM | அ+அ அ- |

இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு சமீபகாலமாக உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என "ஹியுமன் ரீபுரொடக்ஷன்' என்ற இதழ் கூறியுள்ளது.
2010-15-ஆம் ஆண்டுகளில் 165 நாடுகளுக்கிடையே ஆய்வு நடத்தி தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 1980-ஆம் ஆண்டு முதல் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு, உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதாம்.
முன்பு 1000 குழந்தைகளில் 9-12 சதவிகிதம்தான் இரட்டையர் என்று இருந்த நிலைமாறி, இன்று அது 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாம்.
உலகில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது, புதிதாக பிறக்கும் 42 குழந்தைகளில் ஒன்று இரட்டையராக உள்ளதாம்.
இந்த உயர்வுக்கு காரணம் குழந்தை பெறுதலை தள்ளிப் போடுவது, செயற்கைமுறை கருத்தரிப்புகளுக்கு உட்படுத்திக் கொள்வது ஆகியவைதான் எனவும் கூறப்படுகிறது.
தென் அமெரிக்காவில் மட்டும் இரட்டையர் பிறப்பு கூடவில்லையாம். அதே சமயம், ஆசியாவில் 32சதவிகிதமும், வட அமெரிக்காவில் 71 சதவிகிதமும் இரட்டையர் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாம்.