விஞ்ஞானிகளா, வீராங்கனைகளா?

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வருகின்றனர். விஞ்ஞானம் முதல் விவசாயம் வரை அனைத்திலும் பெண்கள் பங்கு போற்றத்தக்கதாக திகழ்கிறது.
விஞ்ஞானிகளா, வீராங்கனைகளா?


பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வருகின்றனர். விஞ்ஞானம் முதல் விவசாயம் வரை அனைத்திலும் பெண்கள் பங்கு போற்றத்தக்கதாக திகழ்கிறது. சர்வதேச அளவில் விளையாட்டிலும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளாகவும் 7 பெண்கள் அசத்தி வருகின்றனர்.

அன்னா கைய்ùஸன்ஹோபர் (ஆஸ்திரியா):- கணித மேதையில் இருந்து சைக்கிள் வீராங்கனை ஆஸ்திரியாவைச் சேர்ந்த 30 வயதே ஆன சைக்கிள் வீராங்கனை அன்னா கைய்ùஸன்ஹோபர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி மகளிர் தனிநபர் சைக்கிள் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார், கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரியாவுக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் தங்கம் இதுவாகும். லாúஸனில் உள்ள எகோல் கல்லூரியில் கணிதத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற கணிதமேதை ஆவார். கணிதத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட அன்னா, ஒவ்வொரு கணக்குகளுக்கும் தீர்வு காண்பதில் வல்லவர். 

ஹாடியா ஹோஸ்னி (எகிப்து): பாட்மிண்டன் வீராங்கனையான பேராசிரியை பார்மஸி துறையில் பாடம் நடத்திக் கொண்டே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பாட்மிண்டன் வீராங்கனையாக பரிணமித்துள்ளார் எகிப்தின் ஹாடியா ஹோஸ்னி. ஆப்ரிக்க கண்டத்தின் பாட்மிண்டன் விளையாட்டின் ராணியாக கருதப்படுகிறார் ஹாடியா.  சிறப்பான ஆட்டத்துக்காக 2008, 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கான எகிப்து மகளிர் பாட்மிண்டன் அணியில் இடம் பெற்றார் ஹாடியா.  

விளையாட்டில்   பிரகாசித்துக் கொண்டே பயாலஜிக்கல் சயின்ஸ் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஹாடியா, தற்போது எகிப்தில் உள்ள பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் மருந்தாளுநர் பாடத்தின்  பேராசிரியையாக பாடமும் நடத்தி வருகிறார். கெய்ரோ நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார் ஹாடியா.

சார்லோட் ஹைம் (பிரான்ஸ்):  நரம்பியலில் இருந்து ஸ்கேட்போர்டிங் நரம்பியல் துறை நிபுணரான சார்லோட் ஹைம் "ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்' விளையாட்டில் முத்திரை பதித்துள்ளார். 27 வயதே ஆன சார்லோட்  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். நரம்பு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது அதே துறையில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். 

கேபி தாமஸ் (அமெரிக்கா): தடகள சாம்பியன் 24 வயதே ஆன இளம் பெண்ணான அமெரிக்காவின் கேபி தாமஸ், (கேப்ரியல்லா) தடகள சாம்பியனாகவும், நியூரோ பயாலஜி துறை நிபுணராகவும் ஜொலித்து வருகிறார்.

சாதனைகள் பல நிகழ்த்திய கேபி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் அமெரிக்க தடகள அணியில் இடம் பெற்று, 200 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், மகளிர் 4-100 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். இதற்கு நேர்மாறாக பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நியுரோ பயாலஜியில் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

லூயிஸ் ஷனாஹன் (அயர்லாந்து): இயற்பியலிலிருந்து தடகளம் இயற்பியலில் பிஎச்டி படித்து வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான அயர்லாந்து தடகள அணியில் இடம் பெற்றார். மேலும் 800 மீ. ஓட்டத்தில் பங்கேற்றாலும் பதக்கம் வெல்லவில்லை. ஆராய்ச்சி படிப்பு மாணவியான லூயிஸ் விளையாட்டால், கல்விக்கும் பாதிப்பில்லாத வரையில் நேர மேலாண்மையை கடைபிடித்து வருகிறார். 

நடேன் அபெட்ஸ் (ஜெர்மனி): நரம்பியலிலிருந்து குத்துச்சண்டை பிரமென் பல்கலைக்கழகத்தில் படித்த போது, 21 வயதில் தான் குத்துச்சண்டையில் பயிற்சி பெறத் தொடங்கினார். முதுகலை பட்டம் படிப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். நியுரோசயின்ஸ் பாடத்தில் பிஎச்டி படித்து வரும் அவர், ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் தகுதி பெற்ற முதல் ஜெர்மன் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் எதையும் பெறவில்லை.  பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் ஏற்படும் தீவிர தூண்டுதல் குறித்து கொலோன் மருத்துவமனையில்ஆய்வு செய்து வருகிறார்.

ஆண்ட்ரீயா முரேஸ் (இஸ்ரேல்): நீச்சல் டு உயிரியல் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.  நீச்சலில் 200 மீ ப்ரீஸ்டைல் வீராங்கனையான அவர் 2016 ரியோ மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேல் நீச்சல் அணியில் இடம் பெற்றார். 100 மீ, 200 மீ நீச்சலில் இஸ்ரேல் தேசிய சாதனையை படைத்துள்ள முரேஸ், உயிரியல் படித்து வருகிறார். அமெரிக்காவின் பிரபலமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் நிபுணராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com