சின்னத்திரை மின்னல்கள்!
By ஸ்ரீ | Published On : 15th December 2021 12:00 AM | Last Updated : 15th December 2021 12:00 AM | அ+அ அ- |

ஆயிரத்தைத் தொட்ட ரோஜா!
கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் "ரோஜா'. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே ரோஜா நீண்ட நாள்களாக டி.ஆர்.பியில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு மிகவும் பிரபலமான தொடராக இருந்து வருகிறது. இத்தொடரில் சிபு சூரியன் நாயகனாகவும், பிரியங்கா நல்காரி நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் இத்தொடர் சமீபத்தில் 1000 -ஆவது எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் இத்தொடரின் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகையாகும்பிக்பாஸ் போட்டியாளர்!
கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட கேப்ரியல்லா முதன்முறையாக சின்னத்திரை நாயகியாக களமிறங்குகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்த தொடர் "ஈரமான ரோஜாவே'. இந்தத் தொடர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளி வர இருப்பதாகவும் அதற்கான பைலட் ஷூட் தொடங்கிவிட்டதாகவும் சின்னத்திரை வட்டாரத்தில் தகவல்கள் வெயாகியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் நாயகியாக கேப்ரியல்லா நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இத்தொடரில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பதும் இன்னும் புதிராக இருக்கிறது.