கனவுகள் எதிர்பார்ப்புகள்!

பெங்களூரு, யூபிசிடியில் உள்ள கேலரி டியூமோ என்ற இடத்தில் ஓவிய கண்காட்சியை நடத்திவரும் டாக்டர் புஷ்பா டிராவிட், சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டு முறைப்படி, ஓவிய பயிற்சிப் பெற்று டிப்ளமோ
கனவுகள் எதிர்பார்ப்புகள்!


பெங்களூரு, யூபிசிடியில் உள்ள கேலரி டியூமோ என்ற இடத்தில் ஓவிய கண்காட்சியை நடத்திவரும் டாக்டர் புஷ்பா டிராவிட், சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டு முறைப்படி, ஓவிய பயிற்சிப் பெற்று டிப்ளமோ மற்றும் மாஸ்டர் டிகிரி பெற்றதோடு, ஓய்வு பெறும் வயதில் ஓவியக்கலையில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடின் அன்னை ஆவார்.

தற்போது துவங்கியுள்ள இவரது ஓவிய கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி வரை நடைபெற உள்ளது. இது குறித்து புஷ்பா டிராவிட் என்ன கூறுகிறார்?

""பெங்களூருவில் பிரபல ஓவியர்களின் கண்காட்சி அடிக்கடி நடைபெறுவதும், திரளான ரசிகர்கள் கலந்துரையாடல் களில் கலந்து கொள்வதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணமாகி நான் 60-களில் பெங்களூரு வந்தபோது இது போன்ற ஓவிய கண்காட்சிகள் வெகு அபூர்வமாக நடந்தாலும் வரவேற்பு மிகவும் குறைவாகவே இருந்தது.

ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சியளிக்கக் கூடிய அமைப்புகளும் இல்லை. பின்னர், துவங்கப்பட்ட "சித்ரகலா பரிஷத்' மூலம் நிறைய கண்காட்சிகள், பயிற்சி வகுப்புகள், ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் ஓவிய சந்தை என ஓவிய கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்தன.

நானும் 15 ஆண்டு காலம் பயின்ற ஓவியக் கலையை வீணடிக்க விரும்பாமல் மற்றவர்களுக்கு கற்றுத் தர விரும்பினேன். இதற்காக ஓவிய ஆசிரியை வாய்ப்பு கேட்டு பெங்களூருவில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முயற்சி செய்தேன். சம்பளம் வேண்டாம் கௌரவ ஆசிரியை வேலை கொடுத்தால் போதுமென்று கூறினேன். பலத்த முயற்சிக்குப் பிறகு 1970 -ஆம் ஆண்டு யூனிவர்சிட்டி விஸ்வேஸ்வரய்யா காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்கில் ஆசிரியை பணி கிடைத்தது.

1972-ஆம் ஆண்டு முதன்முதலாக நான் தனிப்பட்ட முறையில் கஸ்தூரிபா ரோட்டில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இன்டஸ்ட்ரியல் அண்ட் டிரேட் சென்டரில் பிளைவுட் பேனல்களில் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக வைத்தபோது, நல்ல வரவேற்பு கிடைத்தது.

அனைத்திந்திய ஓவிய கண்காட்சியில் என்னுடைய சார்பில் பத்து ஓவியங்களை பார்வைக்கு வைத்தபோது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இன்னும் திறமையான ஓவியங்களை கண்காட்சியில் வைக்கும்படி கண்காட்சி பொறுப்பாளர் அறிவுறுத்தினார். அதன்பின்னர், கேன்வாஸ் மற்றும் அக்ரலிக் ஓவியங்களை வரையத் தொடங்கினேன்.

ஆனால், நான் செய்து வந்தது முழுநேர பணி என்பதால், வீட்டு வேலைகளையும்
கவனித்துக் கொண்டு ஓவியப்பணியை தொடர முடியவில்லை. 2001 -ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு மீண்டும் கேன்வாஸ் மற்றும் மியூரல் ஓவியங்களை வரையத் தொடங்கினேன். ஓவியத்துறை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன்.

என்னுடைய மகன்கள் ராகுல் மற்றும் விஜய் ஆகியோர் சிறுவயது முதலே அவரவர் பணிகளில் மும்முரமாக இருந்தாலும், என் கணவர் ஷரத் உள்பட அனைவருமே என் ஓவியப் பணிக்கு உறுதுணையாக உள்ளனர்.

பொது முடக்கத்தின்போது நான் சுதந்திரமாக செயல்பட மிகவும் உதவியாக இருந்தனர். அதன் பின்னரே ஓவிய கண்காட்சி நடத்த வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. இந்த கண்காட்சியில் எனது கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன'' என்றார் டாக்டர் புஷ்பா டிராவிட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com