என் மீது நம்பிக்கை வைத்தேன்!

21 ஆண்டுகளுக்குப் பிறகு "மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் இந்தியப் பெண்ணிற்கு கிடைத்துள்ளது. ஹர்னாஸ் கவுர் சந்து பிறந்து வளர்ந்து 21 வயதில் அழகியாக "மிஸ் பிரபஞ்சம்' அழகிப் போட்டியில் பங்கெடுக்கட்டும்.
என் மீது நம்பிக்கை வைத்தேன்!


21 ஆண்டுகளுக்குப் பிறகு "மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் இந்தியப் பெண்ணிற்கு கிடைத்துள்ளது. ஹர்னாஸ் கவுர் சந்து பிறந்து வளர்ந்து 21 வயதில் அழகியாக "மிஸ் பிரபஞ்சம்' அழகிப் போட்டியில் பங்கெடுக்கட்டும். தேர்வு செய்திடலாம் என்று காத்து இருந்தது போல தோன்றுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியப் பெண்களுக்கு இந்தப் பட்டம் எட்டாக் கனியாக இருந்து வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் பிரபஞ்ச அழகிப்போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. 1994-இல் சுஷ்மிதா சென், 2000-இல் லாரா தத்தா மட்டுமே இதுவரையில் பிரபஞ்ச அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இன்னொரு சர்வதேச அழகிப் போட்டியான மிஸ் வேர்ல்டு பட்டத்தை 1966- இல் ரீட்டா ஃபரியா, 1994-இல் ஐஸ்வர்யா ராய், 1997- இல் டயானா ஹைடன், 1999 -இல் யுக்தா முகி, 2000-இல் பிரியங்கா சோப்ரா, 2017-இல் மானுஷி சில்லரும் பெற்றனர்.

21 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு ஹர்னாஸ் கவுர் சந்து பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் கவுர் சந்துவிற்கு கிரீடம் அணிவித்தார்.

21 வயதாகும் ஹர்னாஸ் கவுர் சந்து சண்டிகரைச் சேர்ந்தவர். அவரை "கேண்டி' (மிட்டாய் ) என்று பட்டப் பெயரில் குடும்பத்தில், நட்பு வட்டத்தில் அழைப்பார்களாம். காரணம், அந்தளவிற்கு மிட்டாய் பிரியர். ஹர்னாஸ் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். உயரம் ஐந்தே முக்கால் அடி. அதற்குள் இரண்டு பாஞ்சாபி படங்களில் நடித்துள்ளார்.

இஸ்ரேலின் எய்லட் நகரில் நடந்த பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் 80 நாடுகளின் சார்பாக 80 அழகிகள் பங்கேற்றனர்.

அழகிப் போட்டிகளில் ஹர்னாஸ் கவுருக்கு முதல் வெற்றி படியாக அமைந்தது 2017-இல் ‘மிஸ் சண்டிகர்'ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். தொடர்ந்து இந்தியாவில் நடந்த வெவ்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு அழகிப் பட்டம் பெற்றார்.

2021-க்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் பல சுற்று வடிக்கட்டலுக்குப் பிறகு முதல் இறுதி போட்டிக்காக 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதி கட்டப் போட்டியில் ஐந்து அழகிகள். அதில் ஹர்னாஸூம் ஒருவர்.

ஹர்னாஸ் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட முக்கியக் காரணம் என்ன தெரியுமா..? ஹர்னாஸிடம், கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள்தான்.

முதலில், "காலநிலை மாற்றம்' குறித்து என்ன நினைக்கிறீர்கள், அதை வெறும் பேச்சு என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

"காலநிலை மாற்றம் என்பது நிஜம்தான். இயற்கை சீற்றத்தால் அனுபவிக்கும் பாதிப்புகளை நினைக்கும்போது என் இதயம் நொறுங்குகிறது. நம்முடைய மோசமான செயல்களாலும் இயற்கை பாதிக்கிறது. இனியாவது நாம் பேசுவதை குறைத்துக் கொண்டு, செயலில் இறங்க வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் இயற்கையை காக்கவோ, அழிக்கவோ செய்யும். எனவே நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். "காலநிலை மாற்றம்' ஏற்பட்ட பின் அதை சரி செய்வதை விட, முன் கூட்டியே காலநிலை மாற்றம் ஏற்படாமல் தடுப்பதே சிறப்பு' என்று ஹர்னாஸ் பதில் அளித்தார்.

இரண்டாவது கேள்வி இதுதான்:

இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு அவர்கள் சந்திக்க கூடிய மன அழுத்தங்களுக்கு உங்களது அறிவுரை என்ன?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்:

"இன்றைய இளம் தலைமுறை எதிர்கொள்ளும் பெரிய மன அழுத்தம், தங்கள் மீது நம்பிக்கை இல்லாததுதான். இளம் தலைமுறையினருக்கு தன் மீது சுய நம்பிக்கை வேண்டும். எப்போது அவர்கள்"நாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள்' என்று நம்புகிறார்களோ அப்போதே அவர்கள் அழகாக மாறிவிடுவார்கள். உங்களை வேறு ஒருவரோடு ஒப்பிட்டுப் பார்க்கா தீர்கள். இது உங்கள் வாழ்க்கை... உங்களுக்காக நீங்கள்தான் வெளியே வந்து பேச வேண்டும். ஏனென்றால் நீங்கள்தான் உங்களுக்குத் தலைவி. நமக்காக நாம்தான் குரல் எழுப்ப வேண்டும். நான் என் மீது முழு நம்பிக்கை வைத்தேன். அதனால்தான் நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன்' என்ற பதில்தான் ஹர்னாûஸ பிரபஞ்ச அழகியாக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com