முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
பைனாப்பிள் டிலைட்
By எஸ்.பிரியம்வதா, சென்னை. | Published On : 29th December 2021 06:00 AM | Last Updated : 29th December 2021 06:13 PM | அ+அ அ- |

தேவையானவை:
பயத்தம் பருப்பு - கால் கிண்ணம்
மில்க் பவுடர் - கால் கிண்ணம்
பைனாப்பிள் ஜூஸ் - அரை கிண்ணம்
சர்க்கரை - அரை கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
பால் - 2 குழிக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விட்டு சர்க்கரையைப் போட்டு கரைய விடவும். ஒரு வாணலியில் 1 மேசைக் கரண்டி நெய் ஊற்றி பயத்தமாவை லேசான சூட்டில் புரட்டி எடுக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும், பயத்தமாவைப் போட்டுக் கிளறவும். மில்க் பவுடர் 2 மேசைக்கரண்டி பாலில் கரைத்து ஊற்றி கிளறவும். சிறிது கிளறியதும், பைனாப்பிள் ஜூஸ் விடவும். நெய்யை ஊற்றி கிளறிக் கொண்டே வரவும். சுருண்டு வரும் பொழுது ஒரு தட்டில் நெய்த் தடவி இதனை கொட்டி பரப்பி துண்டுகளாக்கவும். முந்திரி பாதாம் தேவையெனில் நெய்யில் வறுத்து இதன்மேல் தூவலாம்.
இதுவும் ஒரு வித்தியாசமான கேக்.