விண்கலத்தை வழிநடத்தும் பெண்மணி!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான  அடையாளம் இருக்கிறதா, வருங்காலங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான  கூறுகள்  இருக்கிறதா என்பது குறித்தும், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்று
விண்கலத்தை வழிநடத்தும் பெண்மணி!


செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான  அடையாளம் இருக்கிறதா, வருங்காலங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான  கூறுகள்  இருக்கிறதா என்பது குறித்தும், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை பற்றிய ஆய்வுக்காகவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை கடந்த ஜூலை 30- ஆம் தேதி அனுப்பி வைத்தது.

இந்த, பெர்சவரன்ஸ்  விண்கலம்  சென்ற  வியாழக்கிழமை (18.2.21) அன்று செவ்வாய் கிரகத்தில்  வெற்றிகரமாக  தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து, விண்கலம்  செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தை  நாசா  ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது.

இந்த பெர்சவரன்ஸ் விண்கலத்தை இந்திய வம்சாவளி பெண்ணான சுவாதி மோகன் குழு தலைவராக இருந்து வழிநடத்துகிறார்.

இவர், விண்வெளி மற்றும் விமானத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்கு முன்பும் நாசாவின் இரு முக்கிய திட்டங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com