ஹனி கிரிஸ்பி பேபி கார்ன் 

பேபி கார்னை இரண்டாக நறுக்கி, சூடான தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
ஹனி கிரிஸ்பி பேபி கார்ன் 

தேவையானவை: 

பேபி கார்ன் - 3 
சோள மாவு, மைதா மாவு - தலா 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, பூண்டு - 3 பல்
தேன் -  1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரெட் சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - கால் தேக்கரண்டி 
வெள்ளை எள்ளு - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிது
வெங்காயத்தாள் - சிறிது, காப்சிகம் - 1

செய்முறை: 

பேபி கார்னை இரண்டாக நறுக்கி, சூடான தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு, கொஞ்சம் தண்ணீர் கலந்து, அதில் தயாராக வைத்துள்ள பேபி கார்ன்களை போட்டு நன்கு கலந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர்  வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும்,  மசாலாவில் ஊறவைத்துள்ள பேபி கார்ன்களை, ஒவ்வொன்றாக, போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

 பின்னர், வேறு ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடானதும், வெள்ளை எள்ளு சேர்த்து பொரிக்கவும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேப்சிகம் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து வதக்கி, தக்காளி சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி, பொறித்த பேபி கார்ன் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, ஒரு தேக்கரண்டி தேன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கவும். சுவையான, மொறு மொறுப்பான,  ஹனி கிரிஸ்பி பேபி கார்ன் தயார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com