இளம் பெண் புரோகிதர்!

தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் தாலுக்காவில் உள்ள தாசகோடி கிராமத்தில் வசிக்கும் புரோகிதர் கேஷகோடி சூர்யா நாராயணபட், தன்னுடைய மகளும், பியூசி மாணவியுமான அனகாபட்டை(17) சம்ஸ்கிருதம் மற்றும்
இளம் பெண் புரோகிதர்!

தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் தாலுக்காவில் உள்ள தாசகோடி கிராமத்தில் வசிக்கும் புரோகிதர் கேஷகோடி சூர்யா நாராயணபட், தன்னுடைய மகளும், பியூசி மாணவியுமான அனகாபட்டை(17) சம்ஸ்கிருதம் மற்றும் வேதங்கள் படிக்க வைத்து தன் குடும்பத்தில் முதல் பெண் புரோகி
தராக்கியுள்ளார். அனகா, சிறு பெண்ணாக இருந்தபோதே, இவரது தாத்தா குருவாயூர் பட், இவரை சம்ஸ்கிருதம் மற்றும் வேதம் படிக்கும்படி வற்புறுத்துவாராம்.
தன்னுடைய தந்தையுடன் திருமணம் மற்றும் சுப காரியங்களுக்குத் துணையாக செல்லத் தொடங்கிய அனகா, இரண்டே ஆண்டுகளில் சம்ஸ்கிருதம் மற்றும் வேதங்களை கற்றுக் கொண்டதோடு, தனியாகவே புரோகிதர் பணியை ஏற்று நடத்தும் திறமையையும் பெற்றார். பெண்கள் சம்ஸ்கிருதம் மற்றும் வேதம் கற்பதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று என் தந்தை கூறவே, நானே விருப்பப்பட்டு புரோகிதர் பணியில் பயிற்சிப் பெற்றேன். எங்கள் குடும்பத்தில் நான் முதல் பெண் அர்ச்சகர் என்ற சிறப்பைப் பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது என்கிறார் அனாகா பட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com