பலாக்கொட்டை  பக்கோடா 

பலாக்கொட்டைகளை நன்றாக அலம்பி குக்கரில் வேக வைத்து ஆறிய பிறகு தோலை உரித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு,
பலாக்கொட்டை  பக்கோடா 

தேவையானவை:

பலாக்கொட்டை - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 10
பூண்டு - 6 பல்
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்

செய்முறை:

பலாக்கொட்டைகளை நன்றாக அலம்பி குக்கரில் வேக வைத்து ஆறிய பிறகு தோலை உரித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பூண்டு எல்லாவற்றையும் போட்டு வடைமாவு போல கெட்டியாக அரைக்க வேண்டும். அதில் நெய் ஊற்றி பிசைந்து வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த பிறகு மாவை பிசறி பக்கோடாவாகப் போட்டு பொன்னிறமாக சிவந்தவுடன் எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com