தினை உப்புமா 

தினையை நெய் விட்டு இளம் சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். சூடான எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.
தினை உப்புமா 

தேவையானவை:

தினை அரிசி - 1 கிண்ணம்
கடுகு - 1 மே.கரண்டி
உளுத்தப்பருப்பு - 2 மே.கரண்டி
கடலைப் பருப்பு - 2 மே.கரண்டி
இஞ்சி. நறுக்கியது - சிறிது
மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
உப்பு தேவையான அளவு
நெய் - 2 மே.கரண்டி
கடலை எண்ணெய் - 3 மே.கரண்டி

செய்முறை:

தினையை நெய் விட்டு இளம் சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். சூடான எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.

இதனுடன் 3  கிண்ணம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து வரும் போது வறுத்த தினையை சேர்த்து கட்டி தட்டாமல் உப்பு. பெருங்காயத் தூள் சேர்த்து கிளறவும். மூடிவைத்து வேகவிடவும்.மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com