இந்தியப் பெண் விஞ்ஞானி

ககன்தீப் வைராலஜிஸ்ட் மற்றும் அறிவியலாளர். இவர் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய்க்கிருமிகளை ஒழிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியப் பெண் விஞ்ஞானி

ககன்தீப் வைராலஜிஸ்ட் மற்றும் அறிவியலாளர். இவர் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய்க்கிருமிகளை ஒழிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஃபெலோவாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர். 

உலகின் பழம்பெரும் அறிவியல் நிறுவனமான "ராயல் சொசைட்டி' சிறந்த விஞ்ஞானிகளை கெளரவித்து வருகிறது. ககன்தீப் ட்ரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் (பஏநபஐ) நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.

இவர் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஆய்வகங்களை நிறுவியுள்ளார். நோய்தொற்று, குடல் செயல்பாடு, உடல் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியவற்றிடையே உள்ள சிக்கலான தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் இந்தியாவில் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com