பச்சை பட்டாணி சப்ஜி 

பச்சை பட்டாணி சப்ஜி 

தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா இவைகளை எண்ணெய்யில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

தேவையானவை:

பச்சை பட்டாணி - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - 6
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்

செய்முறை:

தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா இவைகளை எண்ணெய்யில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். புளியை ஊற வைத்து புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் மூன்று தேக்கரண்டி விட்டு கடுகு தாளித்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு பட்டாணியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த விழுதுச் சேர்த்துக் கிளறி புளிச்சாறு, உப்பு, வெல்லம், தக்காளி இவற்றைச் சேர்த்துக் கிளறி போதுமான தண்ணீர்விட்டு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு வேக வைத்து இறக்கவும். இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com