தீபாவளி மருந்து

மேலே உள்ள பொருள்களில் முதல் 8 வரை உள்ள பொருள்களை தனித்தனியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் நன்றாக சிவக்க வறுத்து , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

தேவையானவை:

கண்டதிப்பிலி - 50 கிராம்
அரிசி திப்பிலி - 20 கிராம்
ஜாதிக்காய் - 1
ஜாதிபத்திரி - 8 இதழ்
சித்தரத்தை - 50 கிராம்
விரலி மஞ்சள் - 10
சுக்கு - 100 கிராம்
அதிமதுரம் - 20 கிராம்
ஒமம் - 100 கிராம்
லவங்கம் - 6
ஏலக்காய் - 6
தனியா - 25 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
வெல்லம் - 400 கிராம்
நெய் - 250 கிராம்
நல்லெண்ணெய் - 250 கிராம்
தேன் - 100 கிராம்

செய்முறை:

மேலே உள்ள பொருள்களில் முதல் 8 வரை உள்ள பொருள்களை தனித்தனியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் நன்றாக சிவக்க வறுத்து , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பின்னர், 9 முதல் 14 வரை உள்ள பொருள்களை வாணலியில் நன்றாக வறுத்து கொள்ளவும். அவற்றுடன் ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள முதல் 8 பொருள்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸியில் நைஸாக அரைத்து மாவு ஜல்லடையில் சலித்து எடுத்து கொள்ளவும், ஜல்லடையில் மீதி உள்ளதை மீண்டும் மிக்ஸியில் அரைத்து சலித்து எல்லா மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூடு உள்ள தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தோசை மாவுப் பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

பின்னர், அடி கனமான வாணலியில் வெல்லத்தைப் பொடித்து போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் நன்றாக கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதை அதே வாணலியில் ஊற்றி நன்றாக கொதி வந்ததும், எடுத்து வைத்துள்ள நல்லெண்ணெய், நெய் இரண்டையும் பாதி பாதி ஊற்றி ஒரு கிளறு கிளறி, கரைத்து வைத்துள்ள மருந்து பொடியை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். கலவை கெட்டியானதும் மீதி நெய்யையும், நல்லெண்ணெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி, கிளறி நெய்யும், எண்ணெய்யும் பிரிந்து கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு தேனை பரவலாக விட்டு நன்றாக கலந்து 2-3 மணி நேரம் ஆறவிட்டு கிளறினால் கம கமவென்று வாசனையுடன் தீபாவளி மருந்து ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com