நியூசிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளி!

நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிந்தா அர்டர்னின் தலைமையிலான அமைச்சரவையில் புதிய ஐந்து அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளி!

நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிந்தா அர்டர்னின் தலைமையிலான அமைச்சரவையில் புதிய ஐந்து அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட ஐந்து பேரில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பவரும் ஒருவர். இவர் இந்திய வம்சாவளி. சென்னையில் பிறந்த இவர், சிங்கப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், மேல் படிப்பை நியூசிலாந்தில் தொடர்ந்தார்.

முதன்முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2019 -ஆம் ஆண்டு இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்துறை இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com