பெண்களுக்கான சட்ட உரிமைகள்!

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 குடும்ப வன்முறை நிகழ்ந்துள்ளது. நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிகழ வாய்ப்புள்ளது என்று கருதப் போதுமான காரணம் உள்ள எவரும் அது குறித்த தகவலை அளிக்கலாம்.
பெண்களுக்கான சட்ட உரிமைகள்!


சென்றவார தொடர்ச்சி...

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 குடும்ப வன்முறை நிகழ்ந்துள்ளது. நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிகழ வாய்ப்புள்ளது என்று கருதப் போதுமான காரணம் உள்ள எவரும் அது குறித்த தகவலை அளிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல் சமூகப்பணியாளர், அருகில் வசிப்பவர்கள், உறவினர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரும் அவர் சார்பில் புகார் அளிக்கலாம்.

இப்புகாரை மாவட்ட சமூக நல அலுவலர், காவல் நிலையம், குற்றவியல் நடுவர் போன்ற இடங்களில் அளிக்கலாம்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிவித்து இலவச சட்ட உதவி மற்றும் பாதுகாப்பு அலுவலர் மூலம் சேவை மையங்களின் உதவிகளைப் பெற்றுத் தருதல்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, அடுத்த வன்முறை நிகழாமல் இருக்க, வன்முறை செய்தவர், அப்பெண் வசிக்கும் இடத்திற்கோ, பணிபுரியும் இடத்திற்கோ அல்லது அவரின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கோ செல்ல விடாமல் பாதுகாப்பு அளித்தல்.

பாதுகாக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பான மாற்று உறைவிடம், அவருக்குக் கிடைக்க வேண்டிய உடமைகளை மீட்டுத் தருதல் போன்ற உதவிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட சமூக நல அலுவலரே, மாவட்ட வரதட்சணைத் தடுப்பு அலுவலராகவும் செயல்படுவதால் அவரிடம் வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம்.

பெண் கொடுமைகளுக்கு எதிரான சட்டப்பிரிவு 498 ஏ - படி கொடுமை என்பது. வேண்டுமென்றே மனைவியின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது. அவரது உடல் உறுப்புகளில் கொடிய காயம் உண்டாக்குவது. அவரது உடல் நலத்தையோ, மன
நலத்தையோ கேடுறச் செய்வது.

தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளிவிடுதல். மனைவி (அ) அவரது உறவினரிடமிருந்து பணம், சொத்து போன்ற எதையேனும் பறிக்கும் நோக்குடன் மனைவியைத் துன்புறுத்துவது.

இந்திய தண்டனைச் சட்டம் பரிவு 354- ன் படி ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்கும் நோக்கத்துடன் அவளை வன்முறையில் தாக்குதல் அல்லது தாக்க முனைதல் இரண்டுமே குற்றமாகும். பெண்ணை அவமரியாதை செய்தல்.

ஆபாசப் பாடல்கள் பாடுதல் . மொட்டைக் கடிதம் எழுதி, அச்சுறுத்தல் ஆகிய அனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

காவல்துறையும் பெண்களும்:

குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 160-ன் படி குற்றவியல் வழக்கில் போலீசார் சாட்சியாக விசாரிக்க நேரிடும் பெண்ணைக் காவல் நிலையத்திற்குக் கூப்பிட்டு விசாரிக்கக்கூடாது. அவர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டும்.

காவலருக்கான கட்டளை 701 பகுதி 1-ன் படி, பெண் வசிக்கிற வீட்டில் இரவு நேரத்தில் சோதனையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பெண்ணை விசாரணைக்காகக் காலை 6 மணிக்கு முன்னும், மாலை 6 மணிக்குப் பின்னும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 53(2) என் படி, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், ஒரு பெண் மருத்துவர்தான் பரிசோதிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கட்டளைகள் சில..

கைது மற்றும் விசாரணை செய்யும்போது, காவலர்கள் தங்கள் பெயர் மற்றும் விபரம் அடங்கிய அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டவரின் உறவினரோ, நண்பரோ வெளியூரில் வசித்தால் காவல் நிலையத்தின் மூலமாக 8 மணியிலிருந்து 12 மணி நேரத்திற்குள் அவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட பெண்ணை மற்றொரு பெண்தான் சோதனையிடலாம்.
கைது செய்யப்பட்ட பெண்ணைக் கையில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்லக்கூடாது.

கைது செய்யப்பட்ட பெண்ணைக் காவல் துறையினர் அழைத்துச் செல்லும் போது அவருடன் அப்பெண்ணின் ஆண் உறவினர் உடன் செல்லலாம்.

கைது செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள், ஒருமுறை மருத்துவர் மூலம் கைதியை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

விசாரணையின் போது கைதி தனது வழக்கறிஞர்களைப் பார்க்க அனுமதி அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com