வீரத்தாய் பதக்கம்!

கன்னியாகுமரி  மாவட்டம்,  களியக்காவிளை  அருகே  ஒரே  குடும்பத்தில்  மூன்று பேர்  ராணுவத்தில்  பணியாற்றியதை  கௌரவிக்கும்  வகையில் குடும்பத்தலைவிக்கு இந்திய  ராணுவம்  சார்பில்  "வீரத்தாய்'  பதக்கம்  வழங்க
வீரத்தாய் பதக்கம்!


கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே ஒரே குடும்பத்தில் மூன்று பேர் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில் குடும்பத்தலைவிக்கு இந்திய ராணுவம் சார்பில் "வீரத்தாய்' பதக்கம் வழங்கப்பட்டது.

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகாதேவி வயது 71.

இவரது கணவர் தனஞ்செயன் நாயர். ராணுவத்தில் பணியாற்றியவர்.

இத்தம்பதிகளுக்கு ஐந்து மகன்கள் அவர்களில் வனஜெயன், தவுகித்திரி ஜெயன் ஆகிய இருமகன்களையும் ராணுவத்துக்கு அனுப்பியுள்ளார்.

ஒரே குடும்பத்தில் தந்தை, இருமகன்கள் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில், குடும்பத்தலைவியான சந்திரிகா தேவிக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. ராணுவ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்து இந்த விருதை வழங்கினர்.

சந்திரிகா தேவி கூறுகையில் அரை நூற்றாண்டுக்கு முன் பாகிஸ்தான், சீன நாட்டுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரரான தனஜயன் நாயரை திருமணம் செய்து கொண்டேன். பணி ஓய்வுக்குப் பின் 83 ஆவது வயதில் உயிரிழந்தார்.

எனது இரு மகன்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நினைத்து பெருமைப் படுகிறேன். எனக்கு இந்த வீரத்தாய் விருதும் பதக்கமும் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com