பெண்களை மையப்படுத்தும் படங்களுக்கு வரவேற்பு!

""கரோனா விதிமுறைகள் காரணமாக தியேட்டர்களில் வெளியிட முடியாத படங்கள் ஓடிடியில் வெளியாவது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.
பெண்களை மையப்படுத்தும் படங்களுக்கு வரவேற்பு!

""கரோனா விதிமுறைகள் காரணமாக தியேட்டர்களில் வெளியிட முடியாத படங்கள் ஓடிடியில் வெளியாவது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்கிறார் சமந்தா.

""முதன்முதலாக வெப் சீரியல்களில் நடிக்க நான் தயங்கியபோது "தி பேமலிமேன் - 2" தயாரிப்பாளர் மனோஜ் பாஜ்பாயி வற்புறுத்தலின் காரணமாகவே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அந்தத் தொடர் அளித்த வெற்றி எனக்குள் தொடர்ந்து வெப்சீரியல்களில் நடிக்க ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு, தென்னிந்திய படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்திவந்த எனக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் தேடி வரத்தொடங்கின.

சமீப காலமாக நான் நடித்து வெளியான படங்கள் ஒரேமாதிரியான கதாபாத்திரத்தைக் கொண்டிருந்ததால் என்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் "தி பேமிலி மேன் -2' வெப் சீரியலுக்குப் பின் வரத் தொடங்கியுள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை உருவாக்கத் தொடங்கியிருப்பது எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்று பல நடிகைகளுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறது. வர்த்தக ரீதியான படங்களைவிட பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற துணிச்சலான, தன்னம்பிக்கை ஊட்டும் பெண்கள் பாத்திரங்கள் என்னைத்தேடி வருவதால் அதுபோன்ற படங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளேன்.

கடந்த காலங்களில் சில ரீமேக் படங்களில் நடித்ததைப் போல் இனி ரீமேக் படங்களில் நடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன் எனக்காக நல்ல பாத்திரங்கள் காத்திருக்கின்றன. தற்போதைய மாறுபட்ட படங்கள் ஓடிடியில் வெளியாவது என் போன்ற நடிகைகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தியேட்டர்களில் படம் பார்க்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால் வீட்டிலேயே ஓடிடியில் படம் பார்ப்பதை பலரும் விரும்புகின்றனர் . தியேட்டர்களில் படம் பார்ப்பதுபோல் இதுவும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி வருகிறது.

சமீபகாலமாக ஓடிடியில் அனைத்து மொழி படங்களும் சப் டைட்டிலுடன் வெளியாகின்றன. இவை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. சினிமாவுக்கு மொழி முக்கியமல்ல என்பதையை இது உணர்த்துகிறது. ரசிகர்களுக்கு கலையம்சம் பிடித்திருந்தால் எந்த மொழியாக இருந்தாலும் ரசிக்கிறார்கள். இப்படியொரு மாறுதல் ஓடிடி மூலம் ஏற்படுமென யாருமே எதிர்பாக்கவில்லை. இந்திய மொழிப் படங்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் படங்களும் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பாகின்றன. இது மிகப்பெரிய மாறுதல் ஆகும்.

இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்துவந்த நான், பாலிவுட் படங்களில் மட்டுமின்றி மேலும் சில வெப் சீரியல்களிலும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளேன். இந்த புத்தாண்டில் மேலும் பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் ஏற்படுமென நம்புகிறேன். இதனால் நாக சைதன்யாவுடன் நான் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பதால், என்னுடைய இன்ஸ்டாகிராமில் எங்களைப் பற்றி இருந்த தகவல்களை முழுமையாக நீக்கிவிட்டேன்'' என்கிறார் சமந்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com