ஜிலேபியில் இத்தனை வகைகளா?

ஜிலேபி பலரும் விரும்பிச் சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று. வட மாநிலங்களில் ஜிலேபியை காலை உணவாக சாப்பிடும் பழக்கமும் உள்ளது.
ஜிலேபியில் இத்தனை வகைகளா?

ஜிலேபி பலரும் விரும்பிச் சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று. வட மாநிலங்களில் ஜிலேபியை காலை உணவாக சாப்பிடும் பழக்கமும் உள்ளது. அந்த வகையில், இந்தியாவில் பல வகை ஜிலேபிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை ஜிலேபிக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அவை என்னவென்று பார்க்கலாம்:

ஜாங்கிரி

இதுவும் ஜிலேபி வகையில் ஒன்று. பொதுவாக ஜிலேபி மைதா மாவில் செய்யப்படும். ஆனால், ஜாங்கிரி, உளுந்து மாவில் செய்யப்படுகிறது. ஜிலேபியை விட ஜாங்கிரி அதிக இனிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் மிகவும் பிரபலான இனிப்புகளில் ஜாங்கிரி முக்கியமானது.

பனீர் ஜிலேபி

வழக்கமாக செய்யும் ஜிலேபியில் பனீர் சேர்த்து செய்யப்படுவது பனீர் ஜிலேபி ஆகும். பனீர் ஜிலேபிக்கு ஃபிரெஷ்ஷாக முழு கொழுப்பு பாலிலிருந்து பனீர் தயாரிக்கப்படுகிறது. பனீர் இனிப்புகளுக்கு பெயர் பெற்ற மேற்கு வங்காளத்தில், பனீர் ஜிலேபி மிகவும் பிரபலமான இனிப்பாகும்.

கருப்பு ஜிலேபி

உருளைக்கிழங்கு மற்றும் கோவாவில் செய்யப்படுவது கருப்பு ஜிலேபி ஆகும். உருளைக்கிழங்கு மற்றும் கோவாவை சரியான கலவையில் சேர்ப்பது கருப்பு நிறத்தை அளிக்கும். காலா ஜாமூன் என்பது போல காலா ஜிலேபி என்பதும் பழைய தில்லியில் பிரபலமான ஜிலேபி வகையாகும்.

ஜலீபா

ஜலீபா என்பது அதிக கொழுப்புள்ள, அதிக கலோரி கொண்ட ஜிலேபி வகையாகும். ஜிலேபி மாவை நன்றாக புளிக்க வைத்து, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும். ஜிலேபியின் மேல் கிரீம், மலாய் ஆகியவை சேர்த்து வழங்கப்படும். வழக்கமான ஜிலேபியை விட இது அளவில் பெரிதாக இருக்கும்.

கோவா ஜிலேபி

மைதா மாவுடன், கோவா அல்லது கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து செய்யப்படுவது கோவா ஜிலேபி மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமாகும். இந்த ஜிலேபியின் மேல் மலாய் அல்லது சில்லென்று பால் ஊற்றி பரிமாறப்படும்.

இமார்டி

உளுந்து மாவில், மக்காச் சோள மாவு மற்றும் குங்குமப்பூ சேர்த்து செய்யப்படும் இமார்டி, மற்ற ஜிலேபிகளை விட அடர்த்தியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு ஜிலேபி வெறும் உருளைக்கிழங்கை வேக வைத்து, கொஞ்சம் மைதா மற்றும் நெய் சேர்த்து செய்யப்படுவது உருளைக்கிழங்கு ஜிலேபி ஆகும்.

ஆப்பிள் ஜிலேபி

எல்லா இனிப்பு வகைகளிலும் பழங்கள் சேர்த்து செய்வது அல்லது பழச்சாறை சேர்ப்பது புதிய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில் ஜிலேபியில் ஆப்பிளை மசித்து சேர்க்கப்பட்டு பொறித்து சர்க்கரைப் பாகில் சேர்க்கப்படும்.

கார ஜிலேபி

ஜிலேபி என்றாலே இனிப்பு தானா என்ற கேள்விக்கு விடையாக பாப்ரா என்ற கார வகை ஜிலேபி உள்ளது. அரிசி மாவு, கடலை மாவு மற்றும் இஞ்சி பூண்டு கலவை சேர்த்து செய்யப்படும். இந்த ஜிலேபி மேற்கு வங்காளத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com