தலைமுடி உதிர்வை தடுக்க....
By கவிதாபாலாஜி | Published On : 16th February 2022 06:00 AM | Last Updated : 16th February 2022 06:00 AM | அ+அ அ- |

இன்றைய நவீன உலகில் மாசு காற்றாலும், சுத்தமற்ற நீர் ஆதாரங்களாலும் மனித உடலுக்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் முக்கிய பிரச்னையாக உள்ளது தலைமுடி.
தலைமுடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்:
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் கொதிக்க வைத்து ஒருநாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையை அலசி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
வெந்தயம், குன்றிமணியைப் பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.
முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரலாம்.
காய்ந்த நெல்லிக்காயைப் பவுடராக்கி, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.