சமையல் குறிப்புகள்...

வறுத்து பொடி செய்த வெந்தயப் பொடியை ரசம் கொதிக்கும்போது தூவி இறக்கினால், சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்...


வறுத்து பொடி செய்த வெந்தயப் பொடியை ரசம் கொதிக்கும்போது தூவி இறக்கினால், சுவையாக இருக்கும்.

பருப்புப் பொடி செய்யும்போது, துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளுப் பயறையும் சேர்த்துகொண்டால் மிகவும் சுவையாக இருக்கும். வாய்வு  பிரச்னைக்கு நல்ல மருந்தாக இருப்பதுடன் கொழுப்பையும் குறைக்கும்.

பாயசம் செய்யும்போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க இதை வெறும் வாணலியில் வறுத்து பின்னர் நெய் சேர்த்து வறுத்தால், ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு, வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் மாவைப் பிசைவார்கள். ஆனால், தயிர் சேர்த்து சப்பாத்தி மாவை பிசையலாம். சப்பாத்தி அருமையான ருசியில் வரும். சப்பாத்தி, பூரி செய்வதற்கு மாவை உருட்டித் தேய்க்கும்போது, மைதா மாவுக்குப் பதிலாக சோள மாவை கார்ன்ப்ளோர் பயன்படுத்தலாம். தேய்ப்பதற்குச் சுலபமாக இருக்கும்.

வெந்தயக் குழம்பை தயார் செய்து இறக்கும்போது, ஒரு தேக்கரண்டி எள்ளுப்பொடியைப் போட்டால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

மீந்துப்போன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.

-பாகற்காய் குழம்பு செய்யும்போது , கால் டம்ளர் தேங்காய்ப் பால் சேர்த்தால் கசப்பு மாறும். சுவையும் கூடும்.

ஆறு துண்டுகள் அன்னாசிப் பழத்தைச் சேர்த்து ரசம் செய்தால் மிதமான மணத்துடன் ருசியாக இருக்கும். சத்தான ரசமும் கூட.

தயிர் பச்சடி செய்யும்போது சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போடவும். இல்லையெனில், ஓமமும் வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். சுவை நன்றாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com