ஆப்பிள் ஐஸிங் கேக்

ஆப்பிள் கேக் செய்முறை எளிமையான வழிகளில்
ஆப்பிள் ஐஸிங் கேக்

தேவையான பொருள்கள்:

ஆப்பிள், மைதா- தலா1 கிலோ

வெண்ணெய்- 600 கிராம்

ஐஸிங் சர்க்கரை- 500 கிராம்

மில்க் மெய்ட்- 100 கிராம்

பால்- 150 மில்லி

சர்க்கரை- 250 கிராம்

பட்டைத் தூள்- 10 கிராம்

பிரெட் தூள்- 250 கிராம்

செய்முறை:

ஆப்பிள் ஐசிங் கேக் செய்வதற்கு வெண்ணெய், சர்க்கரை, மில்க் மெட், பால், மைதாமாவு ஆகியவற்ரை ஒன்றாகக் கலந்துவைத்து கொள்ள வேண்டும். பின்னர், ஆப்பிள் தோலை நீக்கிப் பொடிப் பொடியாக நறுக்கி, அதனுடன் சர்க்கரை, பட்டைத் தூள், வெண்ணெயைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு வேக வைத்த ஆப்பிளுடன் பிரெட் தூளைச் சேர்த்துப்பிசைந்து கொள்ளவும். பின்னர், அந்தக் கலவையைத் தடினமாகும் வரை உருட்டி, வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி உருட்டிய மாவை வைத்து, அதன் மீது ஆப்பிள் கலவையை வைக்கவும். இதன் மீது மில்க் மெய்டை பரவலாகச் சேர்த்து, மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி சென்டிகிரேடில் நாற்பது நிமிடங்கள் பேக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com