குல்பி ஐஸ்கிரீம்

சுவையுடன் செய்முறை: மனம் கவரும் குல்பி தயாரிப்பு
குல்பி ஐஸ்கிரீம்

தேவையான பொருள்கள்:

பால்- 3 லிட்டர்

பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 30 கிராம்

கார்ன்ஃப்ளவர், ரோஸ்எசன்ஸ்- தலா 2 தேக்கரண்டி

ஐசிங் சுகர்- 400 கிராம்

ஜெலட்டின்- 3 தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியளவு குறையும் வரை சுண்ட காய்ச்சவும். பால் சுண்டி வரும்போதே அதில் ஐசிங் சுகரை போடவும். பின்னர் அடுப்பில் இருந்து பாலை இறக்கி அதிலிருந்து சிறிது பாலை எடுத்து அதனுடன் கார்ன்ஃப்ளவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் கேஸ் ஸ்ட்வ்வில் வைத்து ஸ்ட்வ்வை சிம்மில் வைத்து கிளறி நன்கு கெட்டியானவுடன் இறக்கவும்.

பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தாவை நீரில் ஊறவைத்து நன்கு ஊறியதும் அவற்றை எடுத்து அதனுடன் சிறிது பாலை சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் ஜெலட்டினை சூடான தண்ணீரில் கரைத்துகொள்ளவும். பின்னர் கெட்டியான பாலில் முந்திரி கலவை, ஜெலட்டின், ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி, ப்ரிஜ்ஜில் வைத்து உறைய வைக்கவும், சுவையான குல்பி ஐஸ்கிரீம் ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com