நம்பிக்கை

பணக்கார இளைஞன் ஒருவனின் விலை உயர்ந்த கார் அவன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தது.
நம்பிக்கை

பணக்கார இளைஞன் ஒருவனின் விலை உயர்ந்த கார் அவன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த ஓர் ஏழைச்சிறுவன் அருகில் சென்று அந்த வண்டியை எட்டிப் பார்த்தான். பின் தொட்டுப் பார்த்தான். அதன் அழகு அவன் மனதைக் கட்டிப் போட்டது.
 அதைப் பார்த்த இளைஞன் சிரித்துக்கொண்டே ""இது என் அண்ணன் எனக்குப் பரிசாகத் தந்தது'' என்றான்.
 அதைக் கேட்ட சிறுவனின் முகத்தில் வியப்பு ஒட்டிக்கொண்டது. ""உனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என நீ ஆசைப்படுகிறாயா?'' என்றான் அந்த இளைஞன்.
 அதற்கு சிறுவனோ சிறிதும் யோசிக்காமல், ""இல்லை அப்படி ஓர் அண்ணனாக நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றான். இதுதான் நம்பிக்கை.
 அடுத்தவரிடம் கை ஏந்தாமல், தான் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் நல்ல நம்பிக்கை.
 ("சிறுவர் கதை அமுதம்' என்னும் நூலிலிருந்து)
 
 முக்கிமலை நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com