பள்ளிக்கூடம் போகலாம்
பாடி ஆடி படிக்கலாம்
படிக்கும் வயதில் வேலைக்கா
பாழாய்ப் போகும் எதிர்காலமே! பெண்களோடு ஆண்களும்
போட்டி போட வந்துட்டோம்
கருத்தாய் செய்து கற்றிட்டால்
கற்றல் என்றும் இனிமையே! தினமும் பள்ளிக்குச் சென்றிட்டால்
மனதை மயக்கும் நம் கல்வியே
இனிய கல்வி கற்றிட்டால்
அது என்றும் நம்மைக் காக்குமே!